என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக  சீர்குலைந்துவிட்டது - உச்சநீதிமன்றம் காட்டம்
    X

    உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டது - உச்சநீதிமன்றம் காட்டம்

    • உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது.
    • ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சிவில் வழக்குகளை குற்றவியல் விஷயங்களாக மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இது மிகவும் தவறு. ஆனால் இது நடக்கிறது.

    உத்தரப் பிரதேசத்தில் இது நாள்தோறும் நடப்பது விந்தையாக இருக்கிறது. இந்த நடைமுறை தவறு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா?.

    ஒவ்வொரு நாளும், சிவில் வழக்குகள் குற்றவியல் வழக்குகளாக மாற்றப்படுகின்றன. இது அபத்தமானது. கடன் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருப்பதை மட்டும் வைத்து குற்றவியல் குற்றமாக அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×