search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு ரத யாத்திரை பரமத்தி வருகை
    X

    அயோத்தியில்அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை பரமத்தி வேலூர் வருகை தந்த போது எடுத்த படம்.

    அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு ரத யாத்திரை பரமத்தி வருகை

    • ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது.
    • ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் வடிவமைப்பு கொண்ட ராம ரத யாத்திரை வாகனத்தை, திருவனந்தபுரம் ஸ்ரீ ராம ஆசிரமம் ஏற்பாடு செய்தது. கடந்த அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் இருந்து ராமர், சீதை சிலையுடன் கிளம்பிய இந்த பக்தர் தரிசன வாகனம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிக்கு வந்தது.

    அப்போது ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடத்தை சேர்ந்த சத்குருக்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ராம ரத யாத்திரைக்கு மலர் தூவி வரவேற்றனர். பின்னர் ராமர் சீதைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ராமர் சீதையை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து ரதம் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவனந்தபுரம் ராம ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி சந்தான மகரிஷி சுவாமிகள் கூறுகையில், ராமர் ரத யாத்திரை வாகனம் அக்டோபர் 5-ந் தேதி அயோத்தியில் தொடங்கி பீகார், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ், ஒடிசா, வெஸ்ட் பெங்கால், ஜார்கண்ட் உட்பட 27 மாநிலங்களுக்கு சென்று ராமர், சீதை கோவிலின் மகிமைகளை பற்றி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் டிசம்பர் 3-ந் தேதி அயோத்தி சென்றடைகிறது. இந்த வாகனம் 60 நாட்களில் இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறது என்றார்.

    Next Story
    ×