search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "day"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

    இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    • ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடந்தது.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும்

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர் வேம்பு, இராமபத்திரன், கருணாநிதி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் பழனிவேலு, முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    ரயில் பயண சலுகை மீண்டும் பெற்றிட, 70 வயது பூர்த்தியாளர்களுக்கு 10 சதவீகிதம் கூடுதல் ஓய்வூதியம் பெற்றிட, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் 9000 வழங்கிடவும், பஞ்சப்படி, மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மயிலாடு துறை வட்ட பொருளாளர் அன்பழகன், தலைவர் விசுவநாதன், நகர வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கவுசல்யா சேகர், சீர்காழி ஜெயக்குமார், தரங்கம்பாடி வட்ட செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    • முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.
    • ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதா ஜியின் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.

    புனித நீருடன் கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்விகளு டன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் உடன் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜிக்கு பாத பூஜை உடன் கலச அபிஷேகம் செய்தனர். மதியம் மகேஸ்வர பூஜையுடன் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜி அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வில் பல நகரங்களில் இருந்து வந்திருந்த சாதுக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் அருளாசி வழங்கினார்கள்.

    • சியாம் பிரசாத் முகர்ஜியின் 69-வது நினைவு தின நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர். சியாம் பிரசாத் முகர்ஜியின் 69-வது நினைவு தின நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சியாம் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மாவட்ட முன்னாள் ஓ.பி.சி. அணி தலைவர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், மீனவர் அணி முன்னாள் செயலாளர் அமல் அரசு, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், செல்வகுமார், தங்க கண்ணன், சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணிமுதல் 11.ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப்பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

    மேலும் மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 13 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

    அதேபோல் தற்போது ஆஸ்பத்திரிகளில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் நிறைய பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேப்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • வாஞ்சிநாதன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரின் உருவப் படத்திற்கு நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முகைதீன் கனி, முருகன், தலைமை ஆசிரியர் மணிமாறன், ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையத்தில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் முன்பிருந்து அமைப்பின் நிர்வாகி சீனிவாசன் தலைமயில் 17 பேர் சைக்கிளில் சென்றனர்.

     காவேரி நகர், பெரந்தார் காடு, அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, தம்மண்ணன் சாலை, நகராட்சி அலுவலக காந்தி சிலை முன்பு நிறைவு பெற்றது. 

    ஒவ்வொரு முக்கிய இடங்களில் நின்று, சைக்கிளில் சென்றால் என்னென்ன நன்மைகள் என்பது பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் செயலர் பிரபு, பொருளர் வரதராஜ், செந்தில்குமார், மோகன்ராஜ், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×