search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுலா தின விழாயொட்டி மாணவ, மாணவி்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா
    X

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலாவை தொடங்கி வைத்த காட்சி.

    உலக சுற்றுலா தின விழாயொட்டி மாணவ, மாணவி்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா

    • சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்ப டுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியின 50 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டை மற்றும் குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு பார்வையிட உள்ளார்கள்.

    இந்த சுற்றுலாவில் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இருவேளை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர், வினாடி-வினா போட்டிக்கான பரிசுகள் ஆகியன சுற்றுலாத்துறையின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

    Next Story
    ×