என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் பாரதிய ஜன சங்க நிறுவனர் தினம்
    X

    சியாம் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


    ஆறுமுகநேரியில் பாரதிய ஜன சங்க நிறுவனர் தினம்

    • சியாம் பிரசாத் முகர்ஜியின் 69-வது நினைவு தின நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆறுமுகநேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர். சியாம் பிரசாத் முகர்ஜியின் 69-வது நினைவு தின நிகழ்ச்சி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகர தலைவர் முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சியாம் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மாவட்ட முன்னாள் ஓ.பி.சி. அணி தலைவர் தங்கபாண்டியன், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், மீனவர் அணி முன்னாள் செயலாளர் அமல் அரசு, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், செல்வகுமார், தங்க கண்ணன், சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×