search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poverty"

    • தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர்களுடன் தாய் வாசுகியும் வசித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை வாசுகி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

    இறந்த 3 பேரும் வறுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியாக குறைந்திருக்கிறது.
    • 25 நாடுகள் 15 வருட காலக்கெடுவுக்குள் வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன.

    ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    இந்தியாவில், 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம் பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 2005/2006-ல் 55.1 சதவீதமாக இருந்த வறுமை 2019/2021-ல் 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வறுமையை குறைத்துள்ளது.

    2005/2006ல், இந்தியாவில் சுமார் 64.5 கோடி பேர் வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2015/2016இல் சுமார் 37 கோடியாகவும், 2019/2021இல் 23 கோடியாகவும் கணிசமாக குறைந்திருக்கிறது.

    இந்தியா உட்பட 25 நாடுகள், இந்த 15 வருட காலக்கெடுவுக்குள் உலகளாவிய வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன. இது விரைவான முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த சாதனையை எட்டி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
    • கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார்.

    பெங்களூரு :

    பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.

    மேலும் கோவில், அதை சுற்றி இருக்கும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலமாக ஒரு நபரை வி.வி.புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

    அந்த நபர் பெயர் ரவி ஆகும். இவர், எய்ட்ஸ் (எச்.ஐ.வி) நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஆவார். அதாவது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை கர்நாடகம் உள்பட 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். 6 ஆண்டுகளில் 33 மாநிலங்களுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால், ரவியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

    எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மோட்டார் சைக்கிளை பரிசாகவும் வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். அந்த வறுமை தான் அவரை திருடனாகவும் மாற்றி இருக்கிறது. இதனால் அவர், வி.வி.புரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. அந்த சாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர். கைதான ரவி மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வறுமையை வெல்ல படிப்புதான் பேராயுதம் என பொன்.மாணிக்கவேல் பேசினார்.
    • நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும்.

    மதுரை

    மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்க வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும். கல்லூரி பருவம் என்பது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் முக்கியமான முதல் படி.

    வறுமையை வெல்லும் வகையில் உங்களின் கற்றல் திறன் அமைய வேண்டும். அதற்கு படிப்புதான் பேராயுதம். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையைப் பெற்றுக் கொண்டு அதில் திறமை களை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னே றுங்கள் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாக ரத்தினம், செயலாளர் ஜெக தீசன், முதல்வர் ராஜேஷ் குமார், துணை முதல்வர் சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
    • குட்டி ராணியின் மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் அரண்மனைக்காரர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55). இவரது மனைவி குட்டிராணி (45). இவர்களுக்கு கலைவாணி (22) உள்பட 3 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகராஜ் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் மனமுடைந்த குட்டிராணி 2 முறை தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து காப்பாற்றினர்.

    குடும்பம் வறுமையில் வாடியதால் குட்டி ராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அறிந்த அவரது மூத்த மகள் கலைவாணி தானும் தற்கொலை செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 21-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    அவர்களை உறவினர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைவாணி நேற்று பரிதாபமாக இறந்தார். குட்டி ராணி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து குட்டி ராணியின் தாய் மாமா செந்தில்குமார் என்பவர் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பண்ருட்டியில் கொரோனாவில் தாயை இழந்து பெண்ணுக்கு ஊரார் திருமணம் நடத்தி வைத்தனர்.
    • தொழிலதிபர் பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் சங்கீதா, இவர்,கொரோனாவுக்கு தாயை இழந்தார். பின்னர் பாட்டி வளர்ப்பில்வளர்ந்து வந்த அந்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. வறுமை மற்றும்போதிய பணவசதி இல்லாததால் இவரது திருமணம் தள்ளிபோனது. அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசிரியர் செந்தமிழ்செல்வன் ஊர்மக்கள் உதவியுடன் திருமணநடத்த ஏற்பாடு செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்த தொழிலதி பர்பாக்கியராஜ் என்பவர் திருமணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்கள்வாங்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். அருகில் இருந்தவர்களும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு செலவை ஏற்றுக் கொண்டனர். நேற்று இவருக்கு உறவினர்களால் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் அதே பகுதி உள்ள அரசியம்மன்கோவிலில் பாக்கியராஜ், புகழேந்தி மற்றும்ஊரார்மு ன்னிலையில் திருமணம் நடந்தது

    • நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி வழங்கப்பட்டது.
    • அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி பெட்டி நேற்று அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாநில நிர்வாகிகள் சாக்ரடீஸ், நாகூர் நகர ஒருங்கிணைப்பாளர் நாகைமணி கலந்து கொண்டனர்.

    மேலும் சிறப்பு விருந்தினராக ஓம்முருகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.

    திருவண்ணாமலையில் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கந்தசாமி உதவி செய்தார். #Tiruvannamalaicollector
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நீலவேணி என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார்.

    அதில் தான் அரசுப்பள்ளியில் படித்து மேல்நிலை பொதுத்தேர்வில் 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். தன்னுடைய அப்பாவும், அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்துதான் என்னை படிக்க வைத்தனர். நான் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.

    தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தான் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் எனவும், தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

    அப்போது, மருத்துவ கல்லூரி இயக்கக தேர்வு குழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

    அதன்படி கடந்த 6-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை விக்னேஷ் நர்சிங் கல்லூரியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை இறந்து விட்ட நிலையில் இவரது தாயார் விவசாய கூலிவேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீலவேணி உள்பட 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறார்.

    குடும்ப வறுமை காரணமாக நீலவேணி கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இருந்தார். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலையினை கூறி கட்டணமின்றி படிக்க உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மாணவியின் வறுமை நிலையினை விளக்கி பரிந்துரை கடிதத்தினையும் அளித்தார்.

    இந்த நிலையில் மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களில் இருந்து முழுவதுமாக விலக்கு அளித்து படிக்க கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது தாயாருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் நீலவேணிக்கு புத்தகம் அளித்து வாழ்த்து தெரிவித்தார்.  #Tiruvannamalaicollector
    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெற்று ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என்று கல்வி உதவி பெற்ற மாணவி கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    திருவள்ளூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்து உள்ளார். அந்த கிராமத்தை மேம்படுத்தி முன் மாதிரி கிராமமாக திகழ்வதற்கான அனைத்து பணிகளையும் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாமல் தவித்தார். இவரது தந்தை முத்து கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். தாய் லட்சுமி மாதம் தோறும் கிடைக்கும் உதவித் தொகை மற்றும் கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வந்தார்.

    இதுபற்றி கமல்ஹாசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மாணவி சுனிதாவின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்தார்.

    இதையடுத்து நெமிலிசேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டப்படிப்பு படிப்பதற்கான இடத்தை சுனிதாவுக்கு பெற்று கொடுத்தார்.

    இதையடுத்து மாணவி சுனிதாவையும், அவரது தாய் லட்சுமியையும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்துக்கு கமல்ஹாசன் வரவழைத்தார். பின்னர் அவர்களிடம் கல்லூரியில் சேர்வதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

    இது குறித்து மாணவி சுனிதாவிடம், கேட்டபோது கூறியதாவது:-

    எனது உயர் கல்விக்கு கமல்ஹாசன் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் உதவி செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    கல்லூரி படிப்பை நல்ல முறையில் அதிக தேர்த்தியோடு முடிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளார். இதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

    கமல்ஹாசன் அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் என்னைப்போல உள்ள ஏழைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைப்போல் அதிகத்தூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த 12 வயது சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்தை கமல்ஹாசன் வழங்கினார்.

    இந்த சிறுவனின் சகோதரிகள் 2 பேரும் உடலில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களது மருத்துவ செலவையும் ஏற்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

    அவர்களை வருகிற 18-ந் தேதி சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதற்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ×