என் மலர்
இந்தியா

இந்தியாவில் குறைந்த தீவிர வறுமை- உலக வங்கி
- 27.1% ஆக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
- நகர்ப்புறங்களில் 10.7%ல் இருந்து 1.1% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் தீவிர வறுமை வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 2011-12ல் 27.1% ஆக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகளில், 26.9 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2011-12ல் 34.4 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்த நிலையில், 2022-23ல் இந்த எண்ணிக்கை 7.5 கோடியாக சரிந்துள்ளது.
கிராமப்புறங்களில் தீவிர வறுமை 18.4%ல் இருந்து 2.8% ஆகவும், நகர்ப்புறங்களில் 10.7%ல் இருந்து 1.1% ஆகவும் குறைந்துள்ளது.
பல்திறன் வறுமை குறியீடு (MPI) 2005-06ல் 53.8%ல் இருந்து 2022-23ல் 15.5% ஆகக் குறைந்துள்ளது.
Next Story






