என் மலர்
நீங்கள் தேடியது "12th Results"
- மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
- குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி சோபனா சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சோபனா வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.
மேலும், மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார்.
- இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் திருப்பூரை சேர்ந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்-அக்நெல் தம்பதியினர். இவர்களுக்கு ரோகித் ராஜா மற்றும் ரோஷன் ராஜா என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர் ஆவர்.இரு மகன்களும் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத் தேர்வில் இரட்டையர்களான ரோகித், ரோசன் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல. மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி மதிப்பெண்தான் எடுப்போம் என்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் இரட்டைப்பிறவியான இருவரும் சொல்லிவைத்தாற் போல் 417 மதிப்பெண் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் எழுதினர்.
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 218 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் எழுதினர்.
திருப்பூர் :
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கிய பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதன் பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 804 மாணவர்கள், 14 ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 631 பேர் எழுதினர். இதில் 12 ஆயிரத்து 459 மாணவர்களும், 13 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 84.16 சதவீதம், மாணவிகள் 92.76 சதவீதம் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை திருப்பூர் மாவட்டம் முழுவதும் 218 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 269 மாணவர்களும், 13 ஆயிரத்து 126 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 395 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 726 மாணவர்களும், 12 ஆயிரத்து 833 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 95.18 சதவீதமும், மாணவிகள் 97.77 சதவீதமும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டினர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 30-வது இடமும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 7-வது இடமும் பிடித்துள்ளது.
- 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ம் தேதிவெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜூன் 20-ஆம் தேதிக்கு காலை 12 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தனித்தனியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வெளியாகிறது.






