என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா - பினராயி விஜயன் அறிவிப்பு
    X

    இந்தியாவில் 'தீவிர வறுமை' இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா - பினராயி விஜயன் அறிவிப்பு

    • 2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தபட்டது.
    • மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது.

    இன்று நடைபெற்ற கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், "கேரளா தீவிரமான வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக மாறியுள்ளது" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய பினராயி விஜயன், "2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது. அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் வார்டு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. இது சூப்பர் செக்கிற்கு உட்படுத்தப்பட்டு வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து, 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

    உணவு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

    முதல் கட்டமாக ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் தவித்த 21,263 பேருக்கு அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.

    20,648 மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் வழக்கமான உணவு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள், மருந்துகள், தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உறுதி செய்யப்பட்டன.

    4,677 குடும்பங்களுக்கு வீடுகளும் 2,713 குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டன. 35,041 குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×