search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிவு"

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 3771 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3030 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 66.23 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 66.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 29.77 டி.எம்.சி. யாக உள்ளது.

    • கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கு தற்போது மீன் வரத்து அதிகரித்துள்ள நிலையில், புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் கடல் மீன்கள் விற்கப்பட்ட விலையில் இருந்து ரூ.80 வரை சரிந்திருக்கிறது.

    இதன்படி இன்றைய தினம் சங்கரா ஒரு கிலோ ரூ.300ம், கண்ணாடி பாறை ரூ.380, வளை மீன் ரூ.380, வஞ்சரம் ரூ.600, அயிலை ரூ.200, விற்பனையானது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், புரட்டாசி மாதம் என்பதால், விற்பனை மந்தமாக உள்ளது.

    இதனால், விலை கிலோவுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது அணை மீன்கள் விலை அப்படியே உள்ளது ஆனால் வரத்து குறைந்துள்ளது என்றனர்.

    • கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து கடந்த 8-ம் தேதி ரூ. 4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா குறைக் கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை 120 காசுகள் குறைந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மற்ற மண்டங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.20 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை-500, பர்வாலா-392, பெங்களூர்-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-530, மைசூர்-480, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    முட்டைவிலை சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரளா விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை பற்றாக்குறை தொடர்வதால், வரும் நாட்களில் முட்டை விலை மேலும் ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப் படு கின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்று மதிக்கும் போக மீதமுள்ள முட்டை கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்

    படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கி ணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரி களுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையா ளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன் வரத்து அதி கரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை -610, பர்வாலா -473, பெங்களூர் -600, டெல்லி -490, ஹைதராபாத் -540, மும்பை -605, மைசூர் -603, விஜய வாடா -535, ஹொஸ்பேட் -560, கொல்கத்தா -570.

    • வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.
    • கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சுல்தான் பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக் கோழி சந்தை கூடுகிறது.

    இங்கு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கிச் செல்வர். கடந்த வாரத்தைவிட இந்த வாரம், கோழிகள் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக் கோழி, 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று 280 ரூபாய்க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருவதால் பொதுமக்கள் அசைவம் சாப்பிட மாட்டார்கள். மேலும் வெயில் காலத்தில் நாட்டுக்கோழியை சமைத்து சாப்பிட்டால், உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால், கோடைகாலத்தில் அவற்றை தவிர்க்கின்றனர்.

    ஒரு சில வியாபாரிகள், பண்ணைக் கோழிகளை நாட்டுக்கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
    • இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.

    இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.

    • லாலாப்பேட்டை சந்தையில் வாழைத்தார் விலையில் சரிவு ஏற்பட்டது
    • விவசாயிகள் கவலை அடைந்தனர்

    கரூர்:

    லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வாழைத்தார் ஏலத்தில் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பரவலாக வாழை சாகு படி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டையில் உள்ள வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் வாழைத்தார் விலை சரிந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார் ரூ.250க்கும், ரஸ்தாளி தார் ரூ.300க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது.
    • இதை தொடர்ந்து சேலத்தில் மார்க்மகெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை

    சேலம், அக்.6-

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை, நேற்று விஜயதசமி விழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. கோவில்களில் சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம், பூைஜ கள் செய்யப்பட்டது. வீடு கள், நிறுவனங்களில் சாமி படங்களுக்கு மலர்க ளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் கோவில்களில் வழிபட பூக்கள் அதிக அளவில் பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இதனால் ஆயுத பூைஜ, சரஸ்வதி பூைஜயை முன்னிட்டு பூக்களில் விலை பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தையொட்டி உள்ள பூ மார்க்கெட்டுகளில் பூக்களில் விைல விபரம் வருமாறு-

    குண்டு மல்லிகை பூ- ரூ.500, முல்லை- ரூ.360, ஜாதி மல்லிகை- ரூ.280, காக்காட்டான்- ரூ.240, கலர் காக்கட்டான் - ரூ.200, சம்மங்களி - ரூ.70, சாதா சம்மங்கி- ரூ.70, அரளி - ரூ.60, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி- ரூ.80, ஐ.செவ்வரளி- ரூ.80, நந்தியாவட்டம் - ரூ.15, சி.நந்திவட்டம் - ரூ.15.

    • தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது.
    • மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழக்தில் மழை, தொடர் விடுமுறையால் மின் தேவை குறைந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தால், கடந்த ஞாயிறு அன்று அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி 90சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலை மின்சாரம், சூரிய மின் சக்தி, அணு மின் நிலையங்கள், மத்திய தொகுப்பு ஆகியவற்றில் இருந்து, தேவைக்கேற்ப மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மழைக்காலம் என்பதால் விவசா யத்திற்கான மின் தேவை

    வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த 19ந் தேதி கோகுலஷ்டமி விடுமுறை தொடங்கி, நேற்று முன்தினம் (21ந் ேததி) வரை தொடர் விடுமுறையாக அமைந்தது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரும்பா லும் கடந்த 3நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதுபோன்ற காரணங்களால், தமிழக அனல் மின் நிலையங்களில் 21ந் தேதி மின் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில், வட சென்னையின் முதல் பிரிவு அனல் மின் நிலை யத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 3 அலகுகள், 2வது பிரிவில் தலா 600 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5அலகுகள், மேட்டூரில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள், 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு என மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி காற்றாலைகளில் 5000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது.

    இந்நிலையில், தொடர் விடுமுறையால் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மின் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. மழை காரணமாக, விவ சாயத்திற்கான மின் தேவையும் குறைந்தி ருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், வட சென்னை முதல் பிரிவில் 210மெகா வாட் அலகில் மட்டுமே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. வட சென்னை 2-வது பிரிவு, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    அனல் மின் நிலையங்களில் மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் இருந்தும், மின் தேவை குறைந்ததால், சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

    பணி நாளான நேற்று மதியம் வரையிலும் கூட மின்தேவை அதிகரிக்கா மல் இருந்தது. பின்னர் வட சென்னையில் 600 மெகா வாட் அலகில் ஒன்று, தூத்துக்குடியில் 2அலகுகள், மேட்டூரில் 210 மெகாவாட் அலகுகள் 2என படிப்படியாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.

    • கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
    • கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

    கோவை 

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    குறிப்பாக கோவை பம்ப்செட் உற்பத்தியில் உலகளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட்டுகளில் 55 சதவீதம் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட்டுகள் ஆகும்.

    கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிக்கும் நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் அதிகமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் பேர் இந்த தொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    0.5 எச்.பி(குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப்செட்டுகள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகிறது.

    ரூ.1500 முதல் ரூ.4.5 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பம்ப்செட் விலை அதிகரித்துள்ளதால், விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    தென்னிந்திய என்ஜினீயரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) கூறியதாவது:-

    பம்ப்செட் உற்பத்தி செலவு கடந்த ஒன்றைரை ஆண்டுகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் போர்வெல் பம்ப்செட் விற்பனை தான் அதிகம் உள்ளது.

    கடந்த ஜூலையில் பம்ப்செட்டுகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே விலை 40 சதவீதம் உயர்ந்த நிலையில் தற்போது 6 சதவீதம் சேர்த்து 46 சதவீதமாக விலை உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. சரக்கு சேவை வரி குறைப்பு, நியாயமான விலையில் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உறுதி செய்தால், நெருக்கடியில் இருந்து இத்தொழில் மீண்டும் வர உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மூலப்பொருட்கள் விலை உயர்வே காரணம்

    கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், பம்ப் செட் தொழில், பாதிக்க–ப்பட்டுள்ளதற்கு மூலப்பொ–ருட்கள் விலை உயர்வு முக்கிய காரணமாகும். காப்பர் விலை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரித்தது. தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களை போன்ற நிறுவனங்கள் விலை ஏற்றினால், வாடிக்கையாளர்கள் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட்களை வாங்கி சென்று விடுகின்றனர். மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை மீண்டும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும் என்றார்.

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.
    • அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 512 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 408 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 103.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 102. 95 அடியானது. வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

    ×