search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LOW"

    • குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது.
    • கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாக பெய்தது.

    இதனால் மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியது.

    மீதமுள்ள வயல்களில் நெற்கதிர்கள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் பணிகளும் ஒருசில இடங்களில் ஆரம்பித்து உள்ளன.

    பொதுவாக அறுவடை காலகட்டங்களில் 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லின் விலை ரூ.800 வரையிலும் குறைந்துவிடும் நிலையில், தற்போது நெல் சாகுபடி பரப்பு குறைந்தது காரணமாகவும், அரசின் கொள்முதல் விலை உயர்வு காரணமாகவும் ரூ.1,300 வரை விற்பனையாகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே பருவ மழைக்கு பின்னர் நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது பயிர் பிடிக்கும் கால கட்டத்தில் இருந்து வருகிறது.

    அவைகளுக்காக இந்த மாதம் 31-ந்தேதி வரை நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாப நாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக கால்வாய்களில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் அணைகளில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,504 கனஅடி நீர் வெளியறே்றப்படும் நிலையில், 143 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 95 அடியாக குறைந்துள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் இன்றைய நிலவரப்படி 81.89 அடி நீர் இருப்பு உள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 475 கனஅடி நீர் திறந்து விடப்படு கிறது. அந்த அணையின் நீர்மட்டம் 105.17 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.92 அடியாகவும் குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்டத் திலும் கடுமையான வெயிலின் காரணமாகவும், பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் அணைகளின் நீர்மட்டம் பாதியாக குறைந்துவிட்டது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 46.70 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 61.25 அடியாகவும் குறைந்துள்ளது. கருப்பாநதி நீர்மட்டம் 50.86 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 27 அடியாகவும் உள்ளது.

    இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவி களும் தண்ணீரின்றி வறண்டுபோய் காட்சியளிக்கிறது. அப்பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    • உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் தவிப்பு
    • காய்கறி விவசாயிகள் வேதனை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், உருளை கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளூர் மட்டுமின்றி நீலகிரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள், உருளைகிழங்கு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஊட்டி, பாலாடா, கேத்தி, கோத்தகிரி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கேரட் விவசாயம் செய்யப்படுகிறது.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    கடந்த 3 மாத காலமாகவே கேரட்டின் விலை தொட ர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு கேரட் விலை அதிகமாக இருந்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த ஆண்டும், அதேபோன்று விலை இருக்கும் என்பதால் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டனர்.

    இதனால் விளைச்சல் அதிகமாகி மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகமானது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் ஒரு கிலோ கேரட் ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை.விலை வீழ்ச்சியை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் லாபம் இல்லை. வியாபாரிகளுக்கு பெரிதாக லாபம் இல்லை.

    வழக்கமாக 200 டன் வரத்து வரும் நிலையில், 300 முதல் 500 டன் வரை வரத்து வருகிறது. வரத்து குறைந்தால் தான் விலை அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    விவசாயிகள் கூறும் போது, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி காய்கறி மண்டியில் கமிஷன் என அனைத்தும் போக விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. கேரட் அறுவடை செய்து உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு விவசாயிகள் தான் என்றார். இதேபோல் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    • தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன.

    ஊட்டி,

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவை தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள மலை காய்கறிகளை சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் அறுவடையாகும் காய்கறிகள் உள்ளூர் மார்க்கெட் மட்டுமின்றி ேமட்டுப்பாளையம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும்.

    ஊட்டியில் கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தற்போது குறைந்து உள்ளது. அங்கு நாள்தோறும் சாராசரியாக, 25 டன்கள் வரை காய்கறி வரத்து இருக்கும். ஆனால் தற்போது 10-15 டன்கள் வரை மட்டுமே காய்கறிகள் வந்து சேருகின்றன. எனவே ஊட்டி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. 

    • லாலாப்பேட்டை சந்தையில் வாழைத்தார் விலையில் சரிவு ஏற்பட்டது
    • விவசாயிகள் கவலை அடைந்தனர்

    கரூர்:

    லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வாழைத்தார் ஏலத்தில் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பரவலாக வாழை சாகு படி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டையில் உள்ள வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் வாழைத்தார் விலை சரிந்துள்ளது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார் ரூ.250க்கும், ரஸ்தாளி தார் ரூ.300க்கும், கற்பூரவள்ளி தார் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்துள்ளது.
    • இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    வட மாநிலங்களில் பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சரிந்துள்ளது, இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஆடி மாதம் பிறக்க உள்ளதால், மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கடந்த வாரம் 60 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 30 காசுகள் குறைத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வந்தது.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக மீண்டும் தக்காளி அதிக அளவில் வரத்தாகி வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.

    இன்று தாளவாடி, சத்தியமங்கலம், ஆந்திரா பகுதியில் இருந்து 25 டன் தக்காளி வந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடு என குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. தினமும் 10 முதல் 12 டன் தக்காளி லோடு வரும்.

    இந்நிலையில் சமீபகா லமாக தக்காளி விலை கூடுவதும், குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெ ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மீண்டும் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இன்று வ.உ.சி.மார்க்கெ ட்டில் தக்காளி வரத்து அதிகரித்தது.

    இன்று ஆந்திரா, குப்பம் போன்ற பகுதியில் இருந்து 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளி விலை குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் கடந்த ஆண்டுகளை விட கடும் சரிவை சந்தித்து ள்ளது.
    • வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 106 அரசு பள்ளிகள் உட்பட 172 பள்ளிகளைச் சேர்ந்த மாணர்கள பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதே போன்று 215 அரசுப் பள்ளிகள் உட்பட 333 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ள புதுக்கோட்டையில் கடந்த 2020-ல் 93.26 சதவீதமாக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 2022-ல் 91.58 சதவீதமாக குறைந்துள்ளது.

    இதே போன்று 10-ம் வகுப்பு தேர்ச்சியைப்பொறுத்தவரை 2020-ல் 96.41 சதவீதமாக இருந்தது. தற்போது 87.85 சதவீதமாக குறைந்துள்ளது. இடையில் 2021-ம் ஆண்டில் படித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் மாநில அளவிலான பட்டியலில் முன்னேறி இந்த புதுக்கோட்டை மாவட்டம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் கூறிய போது :-

    தற்போது பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைந்துள்ளது.

    அதாவது கடந்த 2020-ல் பிளஸ் 2 தேர்வில் 16-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது. இதே போன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17-வது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் 31-வது இடத்துக்கு சென்று விட்டது.

    இதே போன்று 100 சவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அரசின் திட்டங்கள் நம் மாவட்டத்தில் முறையாக அமல்படுத்தவில்லையோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு தொழிற்கல்விகளை கூட கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தலில் உள்ள இடைளெியை போக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து ஆசிரியர்களிடம் போட்ட போது கொரோனா பரவலால் தேர்ச்சி பெற்ற அனைவரும் பொதுத்தேர்வை எழுதினர். முறையாக படிக்காமல் தேர்வுக்கு செனறால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தோரால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போயிருக்கலாம்.

    மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. அத்துடன் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பப்படவில்லை. மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது என்றனர். 

    ×