முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்துள்ளது.இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
முட்டை விலை மேலும் 30 காசுகள் குறைந்தது
Published on

நாமக்கல்:

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

வட மாநிலங்களில் பண்டிகைக் காலமாக இருப்பதால் முட்டை விற்பனை சரிந்துள்ளது, இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஆடி மாதம் பிறக்க உள்ளதால், மக்களிடையே முட்டை நுகா்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே கடந்த வாரம் 60 காசுகள் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 30 காசுகள் குறைத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60-ஆக நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 93-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com