search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டி பகுதியில்  சாலை ஓரம் வீசப்படும் செண்டு மல்லி பூக்கள்
    X

    சாலையோரம் வீசப்பட்ட செண்டு மல்லிப்பூ.

    காடையாம்பட்டி பகுதியில் சாலை ஓரம் வீசப்படும் செண்டு மல்லி பூக்கள்

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    Next Story
    ×