என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drops"

    • மூன்றாவது காலாண்டில் அதன் இயக்க லாப வரம்பு 25.2% ஆக நிலையாக இருந்தது.
    • செயற்கை நுண்ணறிவு மூலமான நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 17% க்கும் மேல் அதிகரிப்பு

    நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், தனது டிசம்பர் வரையான காலாண்டில் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

    டாடா குழுமத்தின் ஒரு நிறுவனமான டிசிஎஸ் 2024-25 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்திற்கான நிகர லாபமாக ரூ.12,380 கோடியும், அதற்கு முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ.12,075 கோடியும் ஈட்டியிருந்து. இந்தக் காலாண்டில், செயல்பாடுகள் மூலமான வருவாய் 4.86% அதிகரித்து, ரூ.63,973 கோடியிலிருந்து ரூ.67,087 கோடியாக உயர்ந்துள்ளது

    டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாவது காலாண்டில் அதன் இயக்க லாப வரம்பு 25.2% ஆக நிலையாக இருந்தது. இது செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது மாற்றமில்லாமலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் (24.5%) வரம்பை விட அதிகமாகவும் உள்ளது.

    நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குனர் கே. கிருத்திவாசன், செப்டம்பர் காலாண்டில் காணப்பட்ட வளர்ச்சி வேகம் அடுத்த மூன்று மாதங்களிலும் தொடர்ந்ததாகக் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு மூலமான நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 17% க்கும் மேல் அதிகரித்து 1.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் புதிய ஒப்பந்த மதிப்பு 9.3 பில்லியன் டாலராக இருந்தது. பிஎஸ்இ பங்குச் சந்தையில் இன்று டிசிஎஸ் (TCS) பங்கின் விலை 0.86% உயர்ந்து ரூ.3,235.70-ஆக நிறைவடைந்தது


    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ரஷியா 70-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. #FIFA #Russia
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முதல் 7 இடங்களில் மாற்றம் இல்லை. உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், பெல்ஜியம் 3-வது இடத்திலும, போர்ச்சுகல் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா 5-வது இடத்திலும் தொடருகிறது.

    ஆஸ்திரியாவுக்கு எதிரான நட்புறவு போட்டியில் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியாவுக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி 4 இடங்கள் சரிந்து 70-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த உலக கோப்பையில் களம் காணும் 32 அணிகளில் ரஷியாவே தரவரிசையில் பின்தங்கிய அணியாகும். இதற்கு அடுத்து சவுதி அரேபியா 67-வது இடத்தில் இருக்கிறது.  #FIFA #Russia
    ×