என் மலர்
நீங்கள் தேடியது "பிளிங்கிட்"
- மத்திய அரசின் தலையீடு மற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த வாக்குறுதி நீக்கப்பட்டுள்ளது.
- தற்போது "30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்" என்ற புதிய டேக்லைன்களை பிளிங்கிட் பயன்படுத்துகிறது.
சோமேட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான பிளிங்கிட் '10-minute delivery' என்ற தனது வியாபார உத்தியை அதாவது தனது வாக்குறுதியை திரும்பப் பெற்றுள்ளது. செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற ஆன்லைன் மளிகை விநியோக செயலிகள், வியாபார போட்டியில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் 10 நிமிடங்களில் டெலிவிரி என்ற ஒரு உத்தியை பிளிங்கிட் நிறுவனம் கையிலெடுத்தது. இந்நிலையில் அதனை இப்போது கைவிட்டுள்ளது.
மத்திய அரசின் தலையீடு மற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த வாக்குறுதி நீக்கப்பட்டுள்ளது. 10 நிமிட டெலிவரி இலக்குகள், ஊழியர்களை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டவும், அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிளிங்கிட்டைத் தொடர்ந்து செப்டோ, இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது "30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்" என்ற புதிய டேக்லைன்களை பிளிங்கிட் பயன்படுத்துகிறது.






