search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prabin Lal Agrawal"

    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
    • திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    ×