9 வயது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த அவலம்

இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார்.கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.
9 வயது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த அவலம்
Published on

திரிபுராவில் தனது 9 வயது மகனை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் அகார்தலாவில் உள்ள ஜோயாநகர் பகுதியில் சுபர்ணா பால் என்ற பெண் தனது 9 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இவரது கணவன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் மகள் திருமணமாகி சென்றுவிட்டார். பணத்துக்கு மிகவும் சிரமப்படும் சுபர்ணா, கட்டிட வேலைகளில் தினக்கூலியாக பணி செய்து வயிற்றைக் கழுவியும் மகனை வளர்த்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று(ஜூன் 10) மாலை வீட்டில் வைத்து தனது 9 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மகனின் பிணத்துக்கு அருகிலேயே பிரம்மை பிடித்து உட்கார்ந்திருந்திருக்கிறார் அபர்ணா. கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசாரிடம், தானே தனது மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அவர் போலீசாரிடம், மகன் தனது சொல் பேச்சு கேட்பதில்லை எனவும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த பணத்தை திருடியதால் மிகுந்த ஆத்திரத்தில் மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். ஏறக்குறைய உலகின் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக உள்ள பணத்தால் மற்றொரு ஏழைக் குடும்பம் நிர்மூலமாக்கியுள்ளது என்றே இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com