என் மலர்
நீங்கள் தேடியது "Indian Envoy"
- ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர்.
- பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
ஜெருசலம்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளை மற்ற நாடுகள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மக்களைக் கொல்கின்றனர். அவர்களை கொல்லும் முன் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளனர். அதன்பின்னரே கொன்றுள்ளனர். இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது தற்காலிகமாக தான் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அது இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடரும். அவர்கள் எங்கிருந்தாலும் அழிப்போம்.
பயங்கரவாதிகள் தொடர்பு குறித்து நாங்கள் தொழில்நுட்ப ரீதியான உள்ளீடுகளை அளித்துள்ளோம். அமெரிக்கா ஆதாரங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் பயங்கரவாதிகள் சுற்றித் திரிகின்றனர்.
ராணாவை ஒப்படைக்க அமெரிக்காவால் முடியும்போது, பாகிஸ்தானால் ஏன் பயங்கரவாதிகளை (ஹபீஸ் சயீத், சாஜித் மிர், ஜாகிர் ரஹ்மான் லக்வி) ஒப்படைக்க முடியாது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்கவே முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு ஏற்கனவே இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார்.
- இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
கொழும்பு:
இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவி ஏற்றார். இந்த நிலையில் நேற்று அவர் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
மேலும் எரிசக்தி துறையில் இந்தியாவின் அதிக முதலீடுகள், திரிகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், ரெயில்வே மற்றும் பிற துறைகளில் முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.






