என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை நடைபெற்ற காட்சி.
மழைநீர் வடிகால், சிறு பாலம் அமைக்க பூமி பூஜை - எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு
- 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
- விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






