search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bridge work"

    • சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    வண்டலூர்:

    வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையான கேளம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைதடுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 4 வழிப்பாதையான இந்த சாலையில், ரத்தினமங்கலம்-கண்டிகை இடையே தலைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தரைப் பாலம் பணி முடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    இதன்காரணமாக கடும் புழுதி பறக்கும் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்ற னர். எனவே தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
    • மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மின் கம்பம் மாற்றியமைக்க தாமதமாவதாக கூறியதையடுத்து மின்சாரத்துறை உதவி பொறியாளரை நேரில் அழைத்து உடனடியாக மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அதற்கு மின்வாரிய அதிகாரி உடனடியாக மாற்றுவதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணியை பார்வையிட்டார். ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் இந்த மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென சட்ட மன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

    எனவே பணிகளை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக முடித்து கொடுக்க எம்.எல்.ஏ. ஆலோசனைகள் கூறினார். அதன்படி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மின்சாரத்துறை பொறி யாளர், நெடுஞ்சாலை துறை உதவிப்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

    • வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வத்தலகுண்டு நெடுஞ்சாலை யில் வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாலப்பணிகள் முடிந்தும் முடியாமலும் உள்ளன.

    சில இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பணி தற்போதுவரை நடைபெற்று வருகிறது.ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பால ப்பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்தப் பணிகள் காரணமாக போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட இடத்தில் மேடாகவும், கரடு முரடாகவும் சாலைகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் தார்ச்சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

    பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் வத்தலக்குண்டு கொடை க்கானல் நெடுஞ்சாலையின் ஓரங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே சாலையை குறுக்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பல மாதங்களாக நடைபெற்று வரும் பணி களால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும், விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிக ளும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
    • திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சத காண்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நேற்று தொடங்கியது.

    தொடர்ந்து வருகிற 11-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி இணைப்புச்சாலை வழியாக திருச்செந்தூர் சென்று வருகிறது.

    மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோல திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்நிலையில் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதிகளில் சரியான அறிவிப்பு பலகைகளோ, போக்குவரத்து காவலர்களோ இல்லாமல் இருப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்களால் மிகப்பெரிய ஆபத்து நடக்கக்கூடும் சூழல் காணப்படுகிறது. மேலும் பாலம் பணி நடைபெறும் பகுதியில் மின்விளக்குகளே இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே பாலம் வேலை நடைபெறும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு முதன்மை செயலர் ஆய்வு செய்தார்.
    • ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலரும், ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

    திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் கணினி வழி பட்டா மாறுதல் மற்றும் ஒ.பி.சி. சான்றுகள் வழங்குவது குறித்தும், நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் இ-சேவைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து திருவாடானை ஊராட்சி ஒன்றியம் அச்சன்குடி ஊராட்சியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கப்பட்ட நூலக கட்டிட பணிகளையும், முகிழ்தகம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் இயேசுபுரம் பச்சவரா ஊரணியை தூர்வாரும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறை யின் நுண்ணுயிர் உர தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார். தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறையின் சார்பில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் வளர்ச்சி பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

    கும்மிடிப்பூண்டியில் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பால பணி நடைபெற்று வருகிறது.

    ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், சிப்காட் தொழிலாளர்களும் பொது மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக அளவில் விபத்துகளும் அப்பகுதியில் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநில துணை பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், சம்பத், ஜெகன், ஏழுமலை, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ம.க. நிர்வாகிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    ×