சேலத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சேலத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து
Published on

சேலம்:

சேலம் டவுன் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் நாகதேவி (வயது 47). இவருடைய கணவர் ஜெயச்சந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் நாகதேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் வீட்டில் இருந்த குழவிக்கல்லை எடுத்து நாகதேவியை தாக்க முயன்றார். ஆனால் அவர் தப்பித்துவிட்டார். இருப்பினும் ஆத்திரத்தில் கத்தியால் நாகதேவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com