என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குற்றாலம்-சுரண்டையில் வாலிபர், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
  X

  குற்றாலம்-சுரண்டையில் வாலிபர், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட தொழிலாளியும் தற்கொலை செய்து கொண்டார்.

  நெல்லை:

  குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கருப்பசாமி(வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகவில்லை.

  இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கருப்பசாமி நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள பொன் நகரத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). கூலி தொழிலாளி. இவர் வயல்காடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பயிர்களுக்கு மருந்து அடித்து கொடுத்து வந்தார்.

  இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை பார்த்தும் அவருக்கு குணமாகாததால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×