என் மலர்

  நீங்கள் தேடியது "Koodankulam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  நெல்லை:

  கூடங்குளம் அருகே உள்ள ஊரல்வாய்மொழி மெயின்ரோட்டில் இசக்கியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து பூட்டிவிட்டு சென்றனர்.

  வழக்கம்போல் நேற்று மீண்டும் கோவிலுக்கு பூசாரி சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டு இருந்தது.

  இதுதொடர்பாக கோவில் நிர்வாகியான அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(வயது 50) கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #SupremeCourt #Koodankulam
  சென்னை:

  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

  அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை. அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


  இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

  இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. #SupremeCourt #Koodankulam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லாததால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
  சென்னை:

  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் இந்திய அணு மின்கழகத்தின் நிர்வாகத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

  முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக 2015-ம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 60 நாட்கள் கூடங்குளம் அணு மின்நிலையம் மூடப்பட்டது.

  ஆனால் எரிபொருள் நிரப்புவதில் தன் சொந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் தகுதித்திறன், குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்; அதாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப தேவையான தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தன்னிடம் இல்லை என்பதை இந்திய அணு மின் கழகம் தாமதமாக உணர்ந்தது.

  அதன்பின்னர் இந்திய அணுமின் கழகம், ரஷியாவில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்களை அனுப்பி வைப்பதற்கு மாஸ்கோவில் உள்ள ஏ.எஸ்.இ. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.

  ஆனால் இதற்கான செலவு 76 சதவீதம் அதிகமாக இருந்தது. கூடங்குளம் அணுமின்நிலையம் மூடப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாலும், நேரம் இல்லாமல் போனதாலும் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் போனதால் அதிக செலவினத்தை இந்திய அணுமின் கழகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

  மேலும் குறிப்பிட்ட 60 நாட்களுக்கு பதிலாக கூடங்குளம் அணு மின்நிலையத்தை 222 நாட்கள் மூட வேண்டியதாகி விட்டது.

  இதில் இந்திய அணு மின்கழகம் கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட எடுத்த முடிவையும், தனது தொழில் நுட்ப வல்லுனர்களைக் கொண்டே எரிபொருள் நிரப்ப மேற்கொண்ட முடிவையும் விவேகம் இல்லாமல் மதிப்பீடு செய்யவில்லை. தொழில் நுட்ப தகுதியை உறுதிப்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக அணு மின்நிலையத்தை மீண்டும் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. மின் உற்பத்தியும் நீண்ட காலம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ரூ.947 கோடியே 99 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல்கள், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளை இயக்கக் கூடாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.#Vaiko #NuclearWaste
  சென்னை:

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவை, ஏன் உலகத்தையே அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம், அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்? என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலக நண்பர்கள் கொடுத்த வழக்கில் வைக்கப்பட்டது.

  அதற்கு பதிலளித்த மத்திய அரசு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போவதாக தெரிவித்தது. தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் அன்றைக்குக் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தின. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை 5 வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

  உச்ச நீதிமன்றம் விதித்த 5 வருட காலம் இந்த மே மாதத்துடன் முடிவுற்றது. உச்ச நீதிமன்றத்தை நாடிய தேசிய அணு மின்கழகம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைத் தாங்கள் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்கப் போவதாகவும், அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையெனவும் தெரிவித்து மேலும் கால அவகாசத்தை 5 ஆண்டுகள் நீட்டித்துத் தரக் கோரியுள்ளது.  கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Vaiko #NuclearWaste
  ×