search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளத்தில் புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    கூடங்குளத்தில் புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

    • மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
    • நாடகம் மூலம் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் புகையிலைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே தொடங்கிய இப்பேரணியை கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, கூடங்குளம் சி.எஸ்.ஐ தேவாலய ரெவரன்ட் எட்வின் டேனியல், மாவட்ட கவுன்சிலர் ஜான் ரூபா கிங்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்ற கல்லூரி மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி பொதுமக்களிடம் துண்டறிக்கையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிழக்கு பஸ் நிலையத்தில் மாணவர்கள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கிய டி.டி.என் கல்வி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் பொது மக்களுக்கும், மாணவர் களுக்கும் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசினார்கள். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது இபாம் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலை சங்கம் மற்றும் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×