என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடங்குளம் அருகே கோவிலில் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்19 Jun 2022 8:57 AM GMT
- அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
கூடங்குளம் அருகே உள்ள ஊரல்வாய்மொழி மெயின்ரோட்டில் இசக்கியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து பூட்டிவிட்டு சென்றனர்.
வழக்கம்போல் நேற்று மீண்டும் கோவிலுக்கு பூசாரி சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகியான அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(வயது 50) கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×