கள்ளச்சாராயம் கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 5 பேர் கைது

சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 5 பேர் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com