search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடங்குளம்"

    • திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு 3, 4-வது அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணு உலைக்கு தேவையான தளவாட பொருட்கள் ரஷியாவில் இருந்து அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து தளவாட பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அதனை லாரிகளில் ஏற்றி கூடங்குளத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 2 லாரிகளில் ஒரு லாரிக்கு 8 வால்வுகள் வீதம் ஏற்றப்பட்டு திருச்செந்தூர் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இதில் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் ஒட்டி வந்த லாரி அதிகாலை 4.45 மணிக்கு முள்ளக்காடு அடுத்த ஓட்டல்காடு விலக்கு பகுதியில் வரும்போது, அங்கு இருந்து சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச் சுவர் மற்றும் காம்பவுண்டு கேட் ஆகியவை உடைந்து நொறுங்கியது. சம்பவ நேரத்தில் பணியில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    • கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.
    • தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5, 6-வது அணு உலைகளுக்கான ரூ.600 கோடி மதிப்பிலான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

    மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் கடந்த 8-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி கூடங்குளத்துக்கு வந்தபோது, அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.

    தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் பாறையில் மோதி சேதமடைந்ததால், நீராவி ஜெனரேட்டர்களுடன் மூழ்கும் நிலை உள்ளது. அந்த ஜெனரோட்டர்களுக்கு ரூ.426 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனத்தினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அவர்கள் கடலுக்குள் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைத்து, அதன்மூலம் கிரேனை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மிதவை கப்பலில் சேதம் அடைந்த பகுதிகளை வெல்டிங் செய்து சரிசெய்யும் பணியும் மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் அந்த மிதவையை இழுவை கப்பலை கொண்ட இழுத்து செல்லலாம் என்ற முயற்சி நடக்கிறது.

    மேலும் தரையில் இருந்தபடியே அதிநவீன கிரேனை நிறுத்தி கடலுக்குள் இருக்கும் ஜெனரேட்டரை மீட்க முடியுமா எனவும் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகள் 20 நாட்கள் வரை தொடரும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
    • அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது தரை தட்டியது.

    இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க கொழும்புவில் இருந்து மற்றொரு கப்பல் வரவழைக்கப்பட்ட நிலையில், நீராவி கொள்கலன்கள் எடை அதிகமாக இருப்பதால், மிதவை கப்பலை இழுக்க முடியாது என கப்பல் அதிகாரிகள் கை விரித்துவிட்டனர். இதனால் வேறு வழிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்க தொடங்கி உள்ளதால், நீராவி கொள்கலன்களும் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. இதனால் சாலை அமைத்து ராட்சத கிரேன் மூலமாக கொள்கலனை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.2 கோடி செலவில் அங்கு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கொள்கலன் கடலில் சரிந்து விழுவதற்குள் அதனை மீட்க துரிதமான நடவடிக்கைகளை அணு உலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அவ்வப்போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    அங்கு இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

    • அணுமின் நிலையத்தில் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • போட்டியில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மாநில புலம்பெயர் தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    அண்மையில் திருப்பூரில் வாட்ஸ் அப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து வட மாநில தொழிலாளர்களுக்கு பாது காப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், புலம்பெயர் தொழி லாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்தும் அச்சம் தவிர்த்தும் அறிவுரை வழங்கினார்

    இந்நிலையில் கூடங்குளத்தில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும், அச்ச உணர்வை தவிர்க்கும் விதமாக கைப்பந்து போட்டி நடத்தினர்.

    இதில் காவல்துறை அணியும், வடமாநில தொழிலாளர்கள் அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அணிகளுக்கு டி.எஸ்.பி.யோகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு குறித்து பேசிய கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ எந்த நேரமும் தொடர்பு கொள்ள தொடர்பு செல்போன் எண் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், இரண்டாம் நிலை காவலர் பாலகிருஷ்ணன்,போலீஸ் ஏட்டு முத்துபாண்டி, குற்ற புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர், உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 60 ஆண்டுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
    • செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கடந்த மே மாதம் 27-ந் தேதி கூடங்குளத்திற்கு வந்தடைந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை ரஷ்யா அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம் மூலம் 60 ஆண்டுகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு முதன் முதலில் எரிகோல்கள் வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கடந்த மே மாதம் 27-ந் தேதி கூடங்குளத்திற்கு வந்தடைந்தது.

    இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து 2-வது முறையாக நேற்று அவை மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் சாலை மார்க்கமாக 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினரின் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிகோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×