search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nuclear Reactor"

    • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை நரேந்திர மோடி நாளை (4-ந்தேதி) தொடங்கி வைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணு உலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே பா.ஜ.க. அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
    • ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகளும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்தின் 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய மற்றும் ரஷ்ய நிபுணர்கள் முன்னிலையில், ரஷ்யாவின் வோல்கோடோன்ஸ்கில் உள்ள ரோசாடோம் - அடோமெனெர்கோமாஷ் என்ற எந்திர கட்டுமான பிரிவின் ஒரு பகுதியான ஆட்டம்மாசில் கூடங்குளம் அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட அணுஉலை கலன் சோதனை செய்யப்பட்டது.

    இந்த சோதனையின்போது முதலில் வல்லுநர்கள் 600 டன் தூக்கும் திறன் கொண்ட கிரேனை பயன்படுத்தி, 11 மீட்டர் உயரம் உள்ள வி.வி.இ.ஆர்-1,000 என்ற உலையை அதன் வடிவமைப்பு நிலையில் நிறுவினர். பின்னர், 73 டன் எடையுள்ள 10 மீட்டர் நீளமுள்ள கோர் பீப்பாய், 38 டன் எடையுள்ள கோர் பேபில் மற்றும் 68 டன் எடை உள்ள பாதுகாப்பு குழாய் அலகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறக்கினர்.

    பின்னர் உலையானது நிலையான உலை மூடியுடன் மூடப்பட்டது. இதன்காரணமாக அந்த அணு உலையானது மொத்த எடை 603 டன்களை எட்டியது. ஏற்கனவே நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது கடந்த 2013 மற்றும் 2016-ல் முறையே 2 வி.வி.இ.ஆர். உலைகளை தயாரித்து கூடங்குளத்தில் இயக்கி உள்ள நிலையில், தற்போது ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×