search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a nuclear reactor"

    • சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அங்கு 3, 4-வது அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணு உலைக்கு தேவையான தளவாட பொருட்கள் ரஷியாவில் இருந்து அவ்வப்போது கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் ரஷியாவில் இருந்து தளவாட பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அதனை லாரிகளில் ஏற்றி கூடங்குளத்திற்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 2 லாரிகளில் ஒரு லாரிக்கு 8 வால்வுகள் வீதம் ஏற்றப்பட்டு திருச்செந்தூர் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    இதில் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் ஒட்டி வந்த லாரி அதிகாலை 4.45 மணிக்கு முள்ளக்காடு அடுத்த ஓட்டல்காடு விலக்கு பகுதியில் வரும்போது, அங்கு இருந்து சிப்காட்டுக்கு செல்லக்கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச் சுவர் மற்றும் காம்பவுண்டு கேட் ஆகியவை உடைந்து நொறுங்கியது. சம்பவ நேரத்தில் பணியில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மறுகரையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    ×