என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆனையூரில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
    X

    மதுரை ஆனையூரில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது

    திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை ஆனையூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் காஜல் (வயது 18). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    காஜல் அதே பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், நான் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தபோது எனக்கும், சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுருளிவேல் மகன் சுர்ஜித் குமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

    என்னை திருமணம் செய்வதாக கூறி சுர்ஜித்குமார் பலமுறை நெருங்கி பழகினார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×