என் மலர்

  நீங்கள் தேடியது "girl friend"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதால் மனம் உடைந்த வாலிபர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
  ராமநாதபுரம்:

  பரமக்குடி அருகே உள்ள பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் என்பவரின் மகன் லோகேஸ் குமார்(வயது26). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த வாலிபர் லோகேஸ்குமார் மன வேதனை அடைந்து காதலியை கைப்பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

  இதில் தோல்வி ஏற்படவே மனம் உடைந்த வாலிபர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அழைத்து சென்று விசாரித்தனர்.

  இந்த விசாரணையில் வாலிபர் லோகேஸ்குமார், 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பலமுயற்சிகள் செய்தும் முடியாததால் வேறுவழியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடுமுடி அருகே தொழிலாளியை வெட்டி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கொடுமுடி:

  ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழ நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி.

  சிவக்குமார் ஒரு அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என 2 மகன்கள், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

  கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள் மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று காலை வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவக்குமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.

  பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

  சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீரா வர வழைக்கப்பட்டது.

  கொலையுண்ட சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார உத்தரவின் பெயரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மலையம் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த நிலையில் சிவகுமாரின் கள்ளக்காதலி ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  அந்த கள்ளக்காதலி கொடுமுடி அருகே காசி பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதேபோன்று மொடக்குறிச்சி சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சிவகுமார் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

  சிவகுமார் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

  கொலை நடந்த இரவு முதல் கள்ளக்காதலி தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அந்த பெண் தான் சில பேருடன் சேர்ந்து சிவகுமாரை வெட்டி கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஆந்திர வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

  கோவை:

  ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார்(25). இவர் கோவை நல்லாம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

  இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  அவர்கள் கெம்பட்டி காலனியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண் ஊருக்கு செல்வதாக கூறி உள்ளார். ஆனால் லோகேஷ்குமார் வேண்டாம் என கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

  இதில் மனம் உடைந்த லேகேஷ் குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் பெரிய கடை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் லோகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேளாங்கண்ணி லாட்ஜில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நாகப்பட்டினம்:

  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆனைகுப்பம் கள்ளிடைமேடு பகுதியை சேர்ந்தவர் களியபெருமாள். இவருடைய மகன் சுதாகர் (வயது 30). இவர் சென்னையில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார்.

  இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி நாகை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு உள்ள ஒரு லாட்ஜில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.

  இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு 7.30 மணியளவில் சுதாகருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. இதனால் அறையில் இருந்து வெளியே சென்ற சுதாகர் செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தனது அறைக்கு வந்தார்.

  அப்போது அறையில் இருந்த அவரது காதலி செல்போனில் பேசியது யார்? என கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து சுதாகர் குளியல் அறைக்கு சென்றார். இதன்பின் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரது காதலி குளியல் அறை கதவை திறந்த போது குளியல் அறைக்குள் சுதாகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி சத்தம் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த விடுதி பணியாளர்கள் சுதாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சுதாகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

  இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகர் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது காதலியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  மதுரை:

  மதுரை மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவில்லை. ஆனாலும் வல்ல நாதன்பட்டியில் வசிக்கும் காதலி மீனாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

  இந்த நிலையில் மீனாவுக்கு இடது கால் பாதத்தில் புண் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் புண் குணமாக வில்லை.

  காதலி உடல்நலக்குறைவில் அவதிப்படுவதை பார்த்து மனவேதனை அடைந்த அந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

  இதுதொடர்பாக அந்தோணியின் சகோதரர் ஜான்போஸ்கோ மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

  இதேபோல் மதுரை மேலூர் அருகே உள்ள எஸ்.மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராசு மனைவி முத்துப்பிள்ளை (55). இவர் நேற்று மாலை மகன் செந்தில்குமாருடன் மோட்டார் சைக்கிளில் மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்றார்.

  அப்போது முத்துப்பிள்ளை தலைசுற்றுல் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முத்துப்பிள்ளை வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

  இதுதொடர்பாக செந்தில்குமார் மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலைமுத்து வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலியுடன் மகளை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  நிலக்கோட்டை:

  நிலக்கோட்டை அருகே உள்ள அப்பாபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44). தச்சு வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி (40). இவர்களது மகள் கமலி (16), நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  நிலக்கோட்டை தோப்பு பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). ஆட்டோ டிரைவரான இவர் தினமும் கமலியை பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் வீட்டில் விடுவது வழக்கம். அப்போது முத்து லெட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத் தொடர்பாக மாறியது.

  இது ராஜேந்திரனுக்கு தெரியவரவே கண்டித்துள்ளார். இதனால் பாலமுருகன் சம்பவத்தன்று முத்துலெட்சுமியையும், அவரது மகளையும் கடத்திச் சென்று விட்டார். தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போனது கண்டு திடுக்கிட்ட ராஜேந்திரன் பல இடங்களில் தேடிப்பார்த்தார்.

  அதன் பிறகு பாலமுருகன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ் பெக்டர் ராஜூ வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட பெண்களையும் அவரை கடத்தச் சென்ற ஆட்டோ டிரைவரையும் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம் அடைந்தார். பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் திரும்பி வந்தார்.

  தண்டராம்பட்டு:

  திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

  இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

  இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.

  இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

  இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

  மதுரை:

  மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 26). இவருக்கும் உச்சப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

  அப்போது மணமகள் வீட்டில் இருந்து 10 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

  அதன்பிறகு குமார் கள்ளக்காதலி மற்றும் உறவினர்களான ஜெயராமன், அவரது மனைவி தேவி ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொடுமைப்படுத்தினார்.

  இது தொடர்பாக நந்தினி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கம்பம் அருகே கள்ளக்காதலிக்காக மனைவியை கொடுமைபடுத்தி சித்ரவதை செய்த கணவன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  கம்பம் அருகே உள்ள கூடலூரில் கே.பி. பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். (வயது 40). இவரது மனைவி கல்பனா (37). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்து இருந்துள்ளார். இது சம்பந்தமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

  இதனால் சுரேஷ் அடிக்கடி தனது மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடுமைபடுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்த வாக்குவாதத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி கல்பனா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

  எஸ்.பி. உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேச மறுத்த கள்ளகாதலியை அரிவாளால் வெட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். பாத்திர தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

  இந்த நிலையில் மஞ்சுளா தேவிக்கும் அனுப்பர் பாளையம் கஸ்தூரிபா நகரை சேர்ந்த பாத்திர தொழிலாளி சுரேஷ் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்த விவரம் மஞ்சுளா தேவியின் கணவர் கணேசனுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். சுரேசிடம் உள்ள தொடர்பை துண்டித்து விடு என தெரிவித்துள்ளார். மேலும் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

  இதனால் மஞ்சுளா தேவி மனம் திருந்தினார். கடந்த 2 மாதமாக அவர் சுரேசிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். சுரேஷ் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் மஞ்சுளா தேவி அவரிடம் பேசவில்லை.

  இதனால் சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மஞ்சுளா தேவி தனது கணவர் கணேசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். 15 வேலம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் அவர்களை வழி மறித்தார். அவர் மஞ்சுளா தேவியிடம் எதற்காக என்னிடம் பேச மறுக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் வைத்திருந்த அரிவாளால் மஞ்சுளா தேவியை வெட்டினார்.

  இதனை கணேசன் தடுக்க முயன்றார். அவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  இது குறித்து 15 வேலம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே பாதுகாப்பு கேட்டு காதலியுடன் போலீஸ்காரர் தஞ்சமடைந்தார்.

  வடமதுரை:

  திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

  நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

  போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print