என் மலர்

  செய்திகள்

  வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம்
  X

  வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாணாபுரம் அருகே திருமணம் பிடிக்காததால் தோழி வீட்டில் மணப்பெண் தஞ்சம் அடைந்தார். பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் திரும்பி வந்தார்.

  தண்டராம்பட்டு:

  திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் செங்கம் தாலுகா கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஜீவாவுக்கும் கடந்த 13-ந் தேதி வரகூரில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரு வீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.

  இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இளம்பெண் திருவண்ணர்மலையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்துக்கு தனக்கு மேக்கப் போடுவதற்காக சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

  இதையடுத்து, அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் இல்லை.

  இது குறித்து, பெண்ணின் தந்தை வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

  இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் என்ன ஆனார்? அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

  இந்த நிலையில் நேற்று மாலை மாயமான பெண் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டிற்கு சென்றேன். எனது பெற்றோர் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்து, நான் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். இதனையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

  Next Story
  ×