என் மலர்
நீங்கள் தேடியது "worker suicide"
- சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவர் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
நேற்று மாலை கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரத்திற்கு சென்ற மகேஷ் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துள்ளார். அப்போது அந்த வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை விரைவு ரெயில் ஏறி இறங்கியதில் மகேஷ் தலையும், உடலும் துண்டானது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று மகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் கள்ளக்காதல் விவகாரத்தில் மகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு மகேசுக்கு, செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் 2 பேரின் வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை உறவினர்களுக்கும் தெரியவந்ததால், சமீபத்தில் 2 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் இருவரையும் கண்டித்து, அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மகேஷ் தனது மனைவியின் ஊரான வேலாயுதபுரத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கள்ளக்காதலியை பிரிந்த ஏக்கத்தில் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார்.
- இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி வயது (37). இவரது மனைவி மணிமேகலை (34), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருந்தார். அவரது மகன்கள் கூரை வழியாக சென்று வீட்டிற்குள் இறங்கி பார்த்த போது சுப்ரமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் காரிப்ப்படி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி கடைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (34), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அவரது மனைவி கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை 2 மகன்களுடன் சூரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இதையடுத்து கோகிலா தனது குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டு தரக்கோரி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் அண்ணாமலையை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் குழந்தையை கோகிலாவிடம் அனுப்பி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அண்ணாமலை தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு சன்னியாசி முனியப்பன் கோவில் என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தனது 2 மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மாத்திரைகளை சப்பி பார்த்த குழந்தைகள் கீழே துப்பிவிட்டனர். ஆனால் அண்ணாமலை மாத்திரைகளை விழுங்கியதால் மயங்கினார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார்.
- தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், செமுடு குண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மானேயம்மா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீனிவாசுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரும் தனக்கு பிறக்கவில்லை என கூறி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த மானேயம்மா தனது குழந்தைகளுடன் லிங்கைய்ய பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். மனைவி பிரிந்து சென்றதால் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீனிவாஸ் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தி மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் மானேயம்மா கூலி வேலை செய்து குங்கப்பூடி கிராமத்தில் ஏல சீட்டு கட்டி வந்தார். நேற்று இரவு மானேயம்மா ஏல சீட்டு எடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு நடந்து சென்றார்.
மனைவி ஏல சீட்டு பணம் எடுத்துச் செல்வதை அறிந்த ஸ்ரீனிவாஸ் நெல்லூர் மார்க்கெட்டில் புதியதாக கத்தி ஒன்றை வாங்கினார். தனியாக நடந்து சென்ற மனைவியை வழி மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் சிறிது நேரத்தில் தனக்குத்தானே உடல் முழுவதும் கத்தியால் வெட்டிக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
- கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது.
பரமத்திவேலூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பாலசமுத்திரம்பட்டியைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 22). இவரது மனைவி கோவிந்தம்மாள்.
இவர்கள் இருவரும் எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கோழி பண்ணையில் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டு இரவில் வெகுநேரம் கழித்து கணவர் வருவதாக மனைவி கோவிந்தம்மாள் மாமியாரி டம் கூறியதாக தெரிகிறது. இதனால் முத்துக்கு மாரை அவரது தாய் கண்டித் துள்ளார். தாய் கண்டித்த தால் மன முடைந்து காணப் பட்ட அவர், கடந்த 25-ந் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்து மயக்க மடைந்தார். அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அப்போது, முத்துக்குமார் எலி மருந்தை சாப்பிட்டது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின் கடந்த 27-ந் தேதி வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந் தார். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அருண்குமார் ( வயது 25). இவர் ஏ.சி. மெக்கானிக்கல் படித்து விட்டு, தற்போது சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி அபிராமி (21) என்ற மனைவியும், அதிதீ (1½) மகளும் உள்ளனர். இதில் அருண்குமார் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அக்கம், பக்கம் வீடுகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வின்னமங்கலம் - ஆம்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருண்குமார் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைப் பற்றி பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. ெரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என தெரியவில்லை.
இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.
- சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம்(54). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலிங்கம் கடந்த 6-ந் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்தவர்.
அவர் சாப்பிடும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது தம்பி குமார், மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகாலிங்கம் உயிரிழந்தார். இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த பெருமுகை சித்தர் தெருவை சேர்ந்தவர் அன்பு ஜீவ நேசன் (வயது 54).
இவரது மனைவி ஸ்டெல்லா தேவி. கணவன் மனைவி இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
அன்பு ஜீவநேசன் மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அன்பு ஜீவ நேசனால் மகளின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் அன்பு ஜீவன் நேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பு ஜீவநேசன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகளின் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் அன்பு ஜீவ நேசன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார்.
- காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் விநாயக். இவர் திருப்பூர் ஓம்சக்தி கோவில் அருகே உள்ள வெங்கடேசன் நகரில் குடியிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். அவர் ஒடிசாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விநாயக் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த வடமாநில இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் விடுமுறை நாட்களில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இது ஒடிசாவில் உள்ள விநாயக்கின் மனைவிக்கு தெரியவந்தது.
இதையடுத்து திருப்பூர் வந்த விநாயக்கின் மனைவி, அந்த பெண்ணிடம் எனது கணவருடன் இனி பேசக்கூடாது என்று கண்டித்து சென்றுள்ளார். அது முதல் அந்த பெண் விநாயக்கிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.
இதில் மனம் உடைந்த விநாயக் பல முறை தனது காதலியிடம் பேச முயன்றுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, அதே பகுதியில் உள்ள காதலியின் வீட்டுக்கு பல முறை சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். இதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
நேற்று காதலியின் வீட்டிற்கு சென்ற விநாயக் காதலியின் வீட்டு திண்ணையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் காதலி வீட்டில் பனியன் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
மேற்கு வங்கம் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் தப்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரஜாக் (வயது23). இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் செங்குட்டை கிராமத்தில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜூபட்ரா (22) என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் ரஜாக் மனவேதனையுடன் காணப்பட்டார். நேற்று காலையில் ராஜூபட்ரா வேலைக்கு செல்லும்போது கவுதம் ரஜாக்கை அழைத்து உள்ளார். அப்போது அவர் சிறிது நேரம் கழித்து வேலைக்கு வருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து ராஜூபட்ரா வேலைக்கு சென்று விட்டார். ஆனால் கவுதம் ரஜாக் வேலைக்கு வரவில்லை. மாலையில் ராஜூபட்ரா வேலையை முடித்து விட்டு அறைக்கு சென்றுபார்த்தபோது கவுதம் ரஜாக் அங்குள்ள இரும்பு கம்பியில் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக கிடந்த கவுதம் ரஜாக்கின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம்ரஜாக் என்ன காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.