என் மலர்
நீங்கள் தேடியது "Youth suicide attempt"
- காதல் மனைவியை பார்க்க அனுமதிக்காததால் மனவேதனை அடைந்த பிரபு, மாமியார் வீட்டின் முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.
- உடல் கருகிய வாலிபருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேல்மலையனூரை சேர்ந்தவர் பிரபு (வயது33). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபு தினசரி மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததால் விரக்தி அடைந்த காயத்ரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மேலும் காயத்ரியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற பிரபுவை அவரது மாமியார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரபு, மாமியார் வீட்டின் முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
- காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சிவகாசியை சேர்ந்தவர் காளி பிரகாஷ் (வயது24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை ஆழ்வார்திருநகர் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி அதே பகுதியில் உள்ள "லிப்ட்" கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு காளி பிரகாஷ் திடீரென அறையில் இருந்த "தின்னர்" திரவத்தை உடலின் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.
தீ மளமளவென எரிந்ததால் அலறி துடித்த காளி பிரகாஷ் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளி பிரகாசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆசைமணி மகள் ஈஸ்வரியும் (27) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் ஈஸ்வரியின் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர்.
இதையடுத்து ஈஸ்வரியின் பெற்றோரிடம் அருண்குமார் சென்று உங்கள் மகளும் நானும் காதலிக்கிறோம். அவரை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்றார். அதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் அருண்குமாரை திட்டி அனுப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் காதல் ஜோடிகள் அருண்குமாரும், ஈஸ்வரியும் மன வேதனையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் அருண் குமாருக்கு அவரது பெற்றோர் உறவினர் பெண் ஒருவரை திடீரென திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இதற்கு அருண்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது பெற்றோரிடம் சண்டை போட்டார். அப்படியும் அவர்கள் மனம் மாறவில்லை. அருண் குமாருக்கும் நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கும் நாளை (10-ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையே காதலித்த ஈஸ்வரியை தான் திருமணம் செய்வேன் என்பதில் அருண்குமார் உறுதியாக இருந்தார். இதனால் அவர் தன் காதலி ஈஸ்வரியை அழைத்து கொண்டு கும்பகோணம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றார்.
திருமணத்தில் தான் நாம் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என இருவரும் முடிவு செய்தனர். பின்னர் 2 பேரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காதல் ஜோடிகள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது பெற்றோரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.
அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன் என தெரியவந்தது.
போலீசார் இருவரையும் அழைத்து செல்ல முயன்ற போது திடீரென அதில் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.
போலீசாரிடம் தப்பி சென்ற இருவரும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தனக்கு தானே பிளேடால் வெட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
எதற்காக அவர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடினார்கள். ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட வந்தார்களா? என்பது பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே.மடம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது.
இன்று காலை இந்த செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவருடைய கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி இருந்தது.
இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து கூடி விட்டனர். கீழே இறங்கும்படி அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்றார். கொடியை அசைத்து கோஷமிட்டார்.
தகவல் அறிந்ததும் அபிராமபுரம் போலீசார் அங்கு வந்தனர். கீழே இறங்கும்படி வாலிபருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர், “எனது கோரிக்கை நிறைவேற்றினால்தான் கீழே இறங்குவேன்” என்றார்.
கோரிக்கை என்ன என்று கேட்டபோது “18 எம்.எல். எ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும். அதுபற்றி உறுதி அளித்தால்தான் கீழே இறங்குவேன். இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்றார்.
போலீசாரும், அங்கு கூடியிருந்தவர்களும் கோபுரம் உச்சியில் இருந்த வாலிபரை சமாதானப்படுத்தினார்கள். என்றாலும் கீழே இறங்க மறுத்துவிட்டார். 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த அவர் செலபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோபுரத்தில் ஏறிய வாலிபர் பெயர் ராஜேஷ். ராயபுரத்தை சேர்ந்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான இவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
இதுபற்றி கூறிய அவர், “18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிக் கொண்டே போகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அரசு நீடிக்கிறது. தீர்ப்பு வந்து விட்டால் தமிழக அரசியலில் திருப்பம் வரும். எனவேதான் இந்த கோரிக்கையை வற்புறுத்தும் வகையில் கோபுரத்தில் ஏறினேன்” என்றார்.
இதற்கு யாராவது தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்து வாலிபர் ராஜேசிடம் விசாரணை நடந்து வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராடிய சம்பவம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #






