

மேல்மலையனூரை சேர்ந்தவர் பிரபு (வயது33). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபு தினசரி மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டு வந்ததால் விரக்தி அடைந்த காயத்ரி கடந்த 6 மாதத்துக்கு முன்பு கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மேலும் காயத்ரியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற பிரபுவை அவரது மாமியார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரபு, மாமியார் வீட்டின் முன்பு திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.