ஆழ்வார் திருநகரில், தீக்குளித்து தற்கொலை முயற்சி- எரியும் தீயுடன் என்ஜினீயர் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு

காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார் திருநகரில், தீக்குளித்து தற்கொலை முயற்சி- எரியும் தீயுடன் என்ஜினீயர் நடுரோட்டில் ஓடியதால் பரபரப்பு
Published on

போரூர்:

சிவகாசியை சேர்ந்தவர் காளி பிரகாஷ் (வயது24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை ஆழ்வார்திருநகர் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் நண்பர்கள் 2 பேருடன் தங்கி அதே பகுதியில் உள்ள "லிப்ட்" கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு காளி பிரகாஷ் திடீரென அறையில் இருந்த "தின்னர்" திரவத்தை உடலின் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீ மளமளவென எரிந்ததால் அலறி துடித்த காளி பிரகாஷ் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் ஓடினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளி பிரகாசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காளிபிரகாஷ் சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை காரணமா? என்று பல்வேறு கோணங்களில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com