என் மலர்

  நீங்கள் தேடியது "Nick Jonas"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் நிக் ஜோன்சை திருமணம் செய்துக் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தேனிலவு, புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்து செல்கிறார்கள். #PriyankaChopra #NickJonas
  இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை கடந்த 1-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

  இருவரது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்றது. டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

  பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோன்சும் தேனிலவுக்காக 28-ந்தேதி சுவிட்சர்லாந்துக்கு செல்கிறார்கள். லேக் ஜெனிவாவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஒரு வாரம் அங்கு இருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.  2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் திருமணமும் ஒன்று. தீபிகா, ரன்வீர் சிங் திருமணத்தை விட பிரியங்கா, நிக் ஜோன்ஸ் திருமணம் பற்றி தான் பலரும் இணையத்தில் தேடி உள்ளார்கள்.

  திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் பிரியங்கா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கணவருடன் வசிக்க உள்ளார். இந்தி சினிமாவுடன் சேர்த்து ஆலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். பிரியங்காவுக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓமனில் காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் எடுத்த ‘செல்பி’ புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். #PriyankaChopra #NickJonas
  தமிழ் திரைப்பட உலகில் விஜய் ஜோடியாக அறிமுகமாகி, இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ராவுக்கும், அவரை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காதல் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதங்களின் வழக்கப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, இந்தி நடிகர்கள், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பல படங்களிலும், ஹாலிவுட் டி.வி. தொடர்களிலும் நடிக்க உள்ளார்.

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோடீஸ்வரர்களும், பிரபலங்களும் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் விலை உயர்ந்த பங்களாவை வாங்கி இருக்கிறார். அங்கு கணவருடன் பிரியங்கா சோப்ரா குடியேறுகிறார். பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதியர், தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபடி உள்ளனர்.  தற்போது அவர்கள் ஓமனில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர். அங்குள்ள சொகுசு விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஓமனில் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். #PriyankaChopra #NickJonas #PriyankaNickWedding 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார். #PriyankaChopra #PMModi
  புதுடெல்லி:

  பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

  இந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

  இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.

  இந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.  'தங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்துள்ள பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். #PriyankaChopra #PMModi #PriyankaChoprareception
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடிக்கு இன்று இந்து முறைப்படி திருமணம் நடந்தது. திருமண ஜோடிக்கு ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #PriyankaChopramarriage #NickJonas #wedding

  பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் கால் பதித்து பிரபலம் அடைந்தார். அவருக்கும் அமெரிக்க பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோன சுக்கும் காதல் ஏற்பட்டது.

  இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்தனர். பிரபலமான இந்த ஜோடிக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

  பிரியங்கா சோப்ரா இந்து மதத்தை சேர்ந்தவர், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது.

  பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடி பாதிரியார் முன்பு மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் மணமக்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர்.


  இன்று இந்த ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. வேத மந்திரங்களுடன் திருமண சடங்குகள் நடைபெற்றன. பிரியங்கா சோப்ரா கழுத்தில் நிக் ஜோனஸ் தாலி கட்டினார்.

  திருமண ஜோடிக்கு ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாடலும் நடிகையுமான ஜிசலே புன்ட்செர், நடிகர் மைக்கேல் பி. ஜோர்டன், இந்தி நடிகை அலியாபட் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

  பிரியங்கா சோப்ராவை விட நிக்ஜோன்ஸ் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaChopramarriage #NickJonas #wedding 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
  ஜோத்பூர்:

  பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. அவர்கள் இந்து முறைப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திருமணம் செய்து கொள்கின்றனர்.  பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று புகழ்பெற்ற பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

  பிரியங்கா சோப்ரா இந்து மதத்தையும், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுபவர் என்பதால் இரண்டு முறையிலும் திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையில் டிசம்பர் 1 (நேற்று) மற்றும் 2-ந்தேதிகளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி நேற்று ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் பாதிரியார் முன்னிலையில் மண ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

  அதன்படி பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா, சகோதரர் சித்தார்த், உறவினர்களான பிரனிதி சோப்ரா, மன்னாரா சோப்ரா மற்றும் நிக் ஜோனசின் பெற்றோர் பால் கெவின் சீனியர், டெனிஸ், சகோதரர் கெவின், அவரது மனைவி டேனியல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மேலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.  இந்த திருமணத்தையொட்டி அரண்மனை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததுடன், யாரும் புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களும் செல்போன் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

  கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் முடிவடைந்த நிலையில், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. #NickJonas #PriyakaChopra #Marry #WesternCeremony #India
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிக பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதால் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #PriyankaChopra #NickJonas #PriyankaNickWedding
  இந்தி முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவும், ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனசும் காதலித்து வருகிறார்கள். இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் 2-ந்தேதி ராஜஸ்தானில் நடக்கிறது.

  சமீபத்தில் நடந்த தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தற்போது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஜோடிக்கு நடக்க உள்ள திருமணம் தான் இந்திய சினிமாவில் முக்கிய செய்தியாக இருந்துவருகிறது.

  ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா ஒரு இணைய தொடரில் நடித்து பிரபலமானவர். எனவே பிரியங்காவின் திருமணம் உலக அளவில் பிரபலமான திருமணமாகிவிட்டது. இந்தநிலையில் திருமண விழா ஏற்பாட்டில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

  இந்தத் திருமணத்தை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள உமைத் பவனில் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டதோடு, சங்கீத நிகழ்ச்சி மற்றும் மெகந்தி சடங்குகளை ஜோத்பூரில் உள்ள மேரான்கர் கோட்டையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திடீர் மாற்றம் செய்யட்டுள்ளது.  உதய்பூரில் தேர்தல் நடக்க இருப்பதால் உமைத் பவன் மேரான்கர் கோட்டை இடையே திருமண ஊர்வலம் நடந்தால் தங்களால் போதிய அளவு பாதுகாப்பு வழங்க முடியாது எனக் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஒரே இடத்திலேயே இரண்டு நிகழ்ச்சிகளையும் நடத்த பிரியங்கா தரப்பு தற்போது முடிவெடுத்துள்ளது.

  பிரியங்கா சோப்ரா விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இருந்தும் சில பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். #PriyankaChopra #NickJonas #PriyankaNickWedding 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரியங்கா சோப்ராவின் காதலர் நிக் ஜோனஸ், பல கோடி ரூபாயில் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். #PriyankaChopra #NickJonas
  பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இடையேயான காதல் இந்தி சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்காவைவிட பத்து வயது சிறியவர் நிக் ஜோனஸ் என்பதும், இப்போது அவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக முடிவெடுத்திருப்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

  திருமணத்திற்குப் பிறகு பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பிரியங்கா நிக் ஆகிய இருவரும் செட்டில் ஆகிறார்கள். இதற்காக, 48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றினை நிக் விலைக்கு வாங்கியிருக்கிறார். பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் இடம்பெற்றிருக்கும் அத்தனைப் பொருட்களும் தற்போதைய மார்க்கெட்டில் முதல் தரத்தில் இருப்பவையாம்.  ஹாலிவுட்டில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவிலேயே இருக்கவேண்டும் என பிரியங்கா முன்பே முடிவெடுத்திருந்தாலும், அவருக்கென தனிப்பட்ட பங்களா அங்கு இல்லை. ஆனால், நிக் ஜோனஸை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த பிறகு, அவர் மூலம் பிரியங்காவுக்கு பரிசாக அளிக்கப்பட்ட பங்களா தான் இது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும், அவரது காதலர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூரில் உள்ள பிரபல அரண்மனையில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. #PriyankaChopra #NickJonas
  இந்தி திரையுலகின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தார்.

  சில ஆண்டுகளாக ஹாலிவுட் படங்கள் மற்றும் இணைய தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது அமெரிக்காவை சேர்ந்த பாடகரான நிக் ஜோனசுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்ற தொடங்கினார்கள்.

  நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர். இந்த ஆண்டு மத்தியில் தங்கள் காதலை ஒப்புக்கொண்ட இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று செய்தி வந்தது.

  நிக் ஜோனஸ் காதலி பிரியங்கா சோப்ராவை பார்க்க அடிக்கடி இந்தியா வருவார். கடந்த வாரம் வந்தவர் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையை சுற்றி பார்த்தார்.

  தங்களது திருமணம் நடத்துவதற்காக அவர்கள் அரண்மனையை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.  இந்த அரண்மனையை தவிர இன்னும் சில இடங்களையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ஜோத்பூரில் தான் திருமணம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

  பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி தான் தனது நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

  பிரியங்காவின் எண்ணத்திற்கு நிக் ஜோனசும் மதிப்பு கொடுத்து குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். பிரியங்கா, நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் இந்தி பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

  ஆனால் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம் இரு நாட்டு முறைப்படியும் நடக்கும் என்கிறார்கள்.

  அதற்கேற்றாற்போல் இருவரும் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் பாரம்பரிய திருமண உடைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். #PriyankaChopra #NickJonas

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனசுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், பிரியங்காவுடன் காதல் மலர்ந்தது பற்றி நிக் ஜோனஸ் மனம் திறந்து பேசினார். #PriyankaChopra #NickJonas
  பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் காதல் மலர்ந்தது. குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் நியூயார்க்கில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது பற்றி நிக் ஜோனஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

  ‘‘ பிரியங்கா சோப்ரா ஒரு நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.  அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகிவிட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன். ’’ இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.

  இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. #PriyankaChopra #NickJonas 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கும் நிலையில், நிக் ஜோனசின் முன்னாள் காதலி வருத்தம் அடைந்திருக்கிறார். #PriyankaChopra
  பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயது ஆகிறது. நிக்ஜோனாசுக்கு 25 வயது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வைரமோதிரத்தை நிக் ஜோனாஸ் அணிவித்தார்.

  இப்போது மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது நிக் ஜோனாஸ் பெற்றோர் பிரியங்காவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்துள்ளனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிக்ஜோனாசின் முன்னாள் காதலியும் ஆஸ்திரேலிய பாடகியுமான டெல்டா கூட்ரெம்முக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இவரும் நிக்ஜோனாசும் 2011-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். நிக்ஜோனாசை சமரசப்படுத்த டெல்டா கூட்ரெம் முயற்சித்தபோது பிரியங்கா சோப்ராவுடன் காதல் ஏற்பட்டு விட்டது.  இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கும் நிக்ஜோனாசுக்கும் சில பிரச்சினைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது சமரசம் செய்து விடலாம் என்று காத்திருந்தேன். அதற்குள்ளாக பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார்” என்றார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அவர் அழுதார். “நிக்ஜோனாசை தவற விட்டு விட்டேன். நிச்சயதார்த்தம் முடிந்ததை அறிந்து எனது இதயம் உடைந்து விட்டது” என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது காதலரான பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் மும்பையில் வைத்து இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. #PriyankaNickEngagement
  இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

  சமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோர் நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தனர். இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.  பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaChopra #NickJonas #PriyankaNickEngagement #PriyankaChopraEngagement 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo