search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "widow"

    • வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் தங்கமணி.
    • விதவைப் பெண் கோயிலுக்குள் செல்வதை தடுப்பதா என ஐகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    சென்னை:

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்தக் கோவிலில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனை கோவிலுக்குள் நுழைய அந்த ஊரைச் சேர்ந்த அய்யாவு மற்றும் முரளி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    விதவை என்பதால் கோவிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டுவதால், திருவிழாவில் கலந்துகொண்டு, கோவிலுக்குள் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தங்கமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், விதவைப்பெண் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் நிலவுவது துரதிருஷ்டவசமானது. பல சீர்திருத்தவாதிகள் இந்த அர்த்தமற்ற நம்பிக்கைகளை உடைக்க முயன்றாலும், சில கிராமங்களில் அது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என வேதனை தெரிவித்தார். மேலும், ஆண்கள் தங்கள் வசதிக்கேற்ப வகுத்த இந்தக் கோட்பாடுகள் மற்றும் விதிகளால், கணவனை இழந்ததால் பெண்ணை இழிவுபடுத்துகின்றன எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாகரீக சமுதாயத்தில் இவையெல்லாம் தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, மனுதாரர் தங்கமணியும், அவரது மகனும் திருவிழா மற்றும் கடவுள் வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தடுக்க எவருக்கும், எந்த உரிமையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மனுதாரரை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரேனும் தடுக்க முயற்சித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தங்கமணி கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அய்யாவு மற்றும் முரளி ஆகியோரை சிறுவலூர் காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து கோவிலுக்கு வரும் தாய் - மகனையும் தடுக்கக்கூடாது என அறிவுறுத்தும்படி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி வழங்கப்படும் அந்த அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் இருவரும் செயல்பட்டால் சட்டத்திற்குட்பட்டு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் திருவிழா நடக்கக்கூடிய இரு நாட்களிலும் தாயும் மகனும் கலந்து கொள்வதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    திருவட்டார் அருகே திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவரது மனைவி கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜான்ரோஸ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவர் திடீரென மரணம் அடைந்தார்.

    அதன் பிறகும் கிரிஜாவுக்கும், ஜான் ரோசுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்தது. கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை ஜான்ரோஸ் வற்புறுத்தினார். ஆனால் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக தான் 2-வது திருமணம் செய்ய விரும்பவில்லை என கிரிஜா தெரிவித்தார்.

    ஆனால் ஜான்ரோஸ் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஜான்ரோஸ், கிரிஜாவை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக கிரிஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஜான்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த பிரச்சினைக்கு பிறகு சில காலம் கிரிஜாவை ஜான்ரோஸ் சந்திக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிஜாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். கிரிஜா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது ஜான்ரோஸ் ஆத்திரம் கொண்டார்.

    நேற்று இரவு கிரிஜா தனது குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த ஜான்ரோஸ், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதில் கிரிஜாவின் முகம் கருகி வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதையடுத்து ஜான்ரோஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கிரிஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிரிஜாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய ஜான்ரோசை தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ரோஸ் இறந்தார். திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×