search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake passport"

    • தரகரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    • யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்தது அம்பலம்.

    போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதில், பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.

    10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் ஆகும்.

    மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது தெரியவந்துள்ளது.

    யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் வாலிபர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஏர் அரேபியா விமானம் வந்தது.

    விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அந்த பாஸ்போர்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் இருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரியவந்தது.

    இது குறித்து அதிகாரிகள் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் தான் இந்தியன் எனவும், தனது சொந்த மாநிலம் மேற்குவங்கம் என கூறினார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபருக்கு பாட தெரியவில்லை.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 28) என்பது தெரியவந்தது. டெய்லரான இவர் முதலில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்தது தெரிய வந்தது.

    போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த வாரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
    • வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம்(37)என்ற பெண் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை சரி பார்த்த போது அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து ரீனா பேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து அவர் மேற்குவங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவியதும், இந்தியாவில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜென்டுகள் மூலம், பணம் கொடுத்து இந்த போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது.

    அவர் இந்த போலி பாஸ்போர்ட் எதற்காக வாங்கினார்? இந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெங்கு சென்றார்? சென்னைக்கு எதற்கு வந்தார்? எங்கு தங்கி இருந்தார்? அதனை தயாரித்து கொடுத்தவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.

    பின்னர் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரீனாபேகம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ரீனாபேகம் விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கடந்த வாரம் இதை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.

    வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.

    இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபரை கைது செய்த பெருங்குடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் விக்டர். நேற்று இவர் பணியில் இருந்தார். அப்போது கும்பகோணம் ஆடுதுறையை சேர்ந்த முகம்மதுரியாஸ் (வயது 26) என்பவரின் பாஸ்போர்ட் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    விமான நிலைய அதிகாரிகளின் பரிசோதனையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விக்டர் இதுதொடர்பாக பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து முகம்மது ரியாசை கைது செய்து விசாரித்தார்.

    விசாரணையில் முகம்மது ரியாஸ் கொழும்பில் உள்ள பூவரஞ்தோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், கும்பகோணம் கருப்பூர் நேதாஜி நகரில் தற்காலிகமாக வசிப்பதும் தெரிய வந்தது.

    இலங்கையை சேர்ந்த முகம்மது ரியாஸ் எதற்காக கும்பகோணம் வந்து தங்கி உள்ளார்? தமிழகத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏன் இலங்கை செல்ல முயன்றார்? என்பது தொடர்பாக பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னையில் போலி ஆவணங்கள் தயார் செய்து பாஸ்போர்ட், விசா எடுக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸ் கமி‌ஷனருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலி பாஸ்போர்ட் கும்பலின் நடவடிக்கை குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் போலி பாஸ்போர்ட் கும்பல் சிக்கியது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஜான் பிரபாகர், ஜான்சன், புதுப்பேட்டையை சேர்ந்த முகமது யூசுப், ஆவடி பட்டாபிராமை சேர்ந்த மகேஷ், கொளத்தூரை சேர்ந்த விஜய் பிரபு, சூளைமேட்டை சேர்ந்த வெங்கடேஸ்வரன், பெரம்பூரை சேர்ந்த ரவி, அயனாவரத்தை சேர்ந்த ரெஜில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த அனந்தராமன், வண்டலூரை சேர்ந்த சங்கர், டெல்லியை சேர்ந்த சுஜித், மும்பையை சேர்ந்த வெங்கடேஷ் நாயக், உத்தரகாண்ட்டை சேர்ந்த ஹிமான்சு மேவாரி ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயார் செய்ய பயன்படுத்திய ஆவணங்கள், 151 பாஸ்போர்ட்டுகள், லேப்-டாப், ரூ.18 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலி பாஸ்போர்ட் கும்பல் எத்தனை பேருக்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்தது, இதன் மூலம் யார்-யார் பாஸ்போர்ட், விசா பெற்று உள்ளனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். #trichyairport
    கே.கே.நகர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூ கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வெளிநாடு செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து, நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில் செல்ல  இருந்தார். 

    அப்போது தங்கமணியை சோதனை செய்த இமி கிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவர் பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து இருப்பதை  கண்டு பிடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தங்கமணியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport
    மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு துறையில் இன்ஸ்பெக்டர் விக்டர் பணியில் இருந்தார். அப்போது இலங்கை விமானத்துக்கான பயணிகளின் விவரம் சரிபார்க்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் குறித்த விவரம் தவறாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரின் பெயர் வீரகுமார் (24), ஆர்.எம்.எஸ்.காலனி, கருமண்டபம், திருச்சி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பெருங்குடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில், வீரகுமாரின் ஆதார் கார்டு போலி என்பதும், இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை விமான நிலைய அதிகாரி விக்டர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து வீரகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார். #FakePassport
    சென்னை:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் தயார் நிலையில் இருந்தது. அப்போது அங்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கருணாகரன் என்பவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல அங்கு வந்தார். அப்போது அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அது போலி பாஸ்போர்ட் என தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakePassport
    சென்னையில் இருந்து ஜெர்மனி வழியாக கனடாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானத்தில் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் குழுவாக செல்ல வந்திருந்தனர்.

    அவர்கள் குடியுரிமை சோதனைக்கு வந்தபோது, சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்லவதாக கூறினார்கள். ஆனால் குழுவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.

    கடந்த சில மாதங்களாக சினிமா படப்பிடிப்பு என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டில் குழுக்களாக சென்று வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருவதால், குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது 19 பேரின் பாஸ்போர்ட்களும் போலியானது என்று தெரியவந்தது.

    அவர்கள் ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்ல ஏஜெண்டுகளிடம் பணம் தந்து ஏமாந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏஜெண்டுகள் பற்றி குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர்.

    ஆனால் ஏஜெண்டுகள் பற்றி எந்தவித துப்பும் கிடைக்காததால் 19 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். 19 பேரும் கைது செய்யப்பட்டு, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    குற்றப்பிரிவு போலீசார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் தயாரித்து குழுக்களாக அனுப்பிய கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த டிராவல்ஸ் அதிபர் உள்பட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். #FakePassport #Aarrest
    சென்னை:

    சென்னையில் பெரிய அளவில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பல் ஒன்று நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட் கும்பல் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. அங்கு நடத்திய சோதனையில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் கைப்பற்றப்பட்டன.

    மேலும் போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய லேப்டாப், ஸ்கேனிங் மெஷின், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைப்பற்றினர். போலி இந்திய விசாவும், ரூ.85 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    சென்னை பெருங்குடியை சேர்ந்த வீரகுமார் (வயது 47), அவரது தம்பி எழும்பூரை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியன் (45), செனாய்நகரை சேர்ந்த கார்த்திகேயன் (40), செங்குன்றத்தை சேர்ந்த சரவணன் (43), கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (50), அமைந்தகரையை சேர்ந்த உமர் உசேன் (47), சூளைமேடு நெடுஞ்சாலையை சேர்ந்த அம்ஜத்குமார் (36), தியாகராயநகர் கிரியப்பா சாலையை சேர்ந்த சக்திவேலு (47), கோடம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (40), சாலிகிராமத்தை சேர்ந்த குணாளன் (48), அய்யப்பன்தாங்கலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47).

    டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரகுமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர். அந்த கட்சி சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தான் போலி பாஸ்போர்ட் கும்பலின் தலைவனாக செயல்பட்டு உள்ளார்.

    பழைய பாஸ்போர்ட்களை வாங்கி அதில் உள்ள புகைப்படத்தை நீக்கிவிட்டு, புதிதாக பாஸ்போர்ட் கேட்பவரின் புகைப்படத்தை அதில் ஒட்டி, போலி பாஸ்போர்ட்டை தயாரித்து உள்ளனர். இவர்களுக்கு உதவியாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய ஊழியர்களும் செயல்பட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, இவர்கள் போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்து உள்ளனர். ஒரு பாஸ்போர்ட்க்கு ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளனர். இவர்களை பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.   #FakePassport #Aarrest #Tamilnews
    ராமநாதபுரத்தில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து ரூ.90 ஆயிரம் மோசடி செய்த கணன், மனைவி மீது வாலிபர் புகார் அளித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 53). இவர் திருவாடானை கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகன் வர்ணசிங் (24). இவர் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு செல்ல விரும்பினார். அதைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் பனைக்குளத்தைச் சேர்ந்த ருதுமான்அலியை சந்தித்தார். அவர் சவுதிஅரேபியாவில் வேலை வாங்கித் தருகிறேன், அதற்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வாங்கினார்.

    அதன்பின்னர் ருதுமான் அலி மனைவி பாத்து முத்துவிடம் வர்ணசிங் ரூ. 40 ஆயிரம் கொடுத்தார். ரூ. 90 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட கணவனும், மனைவியும் வர்ணசிங்கிடம் பாஸ்போர்ட் ஒன்றை வழங்கினார். அது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வரவே, பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அதற்கு அவரை கணவனும், மனைவியும் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தேவிபட்டிணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×