என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி பாஸ்போர்ட்"
- போலிபாஸ் போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர்.
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் கத்தார் நாட்டிற்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வராமல் அங்கேயே தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் போலிபாஸ்போர்ட்டில் சென்னை வந்த கருப்பையாவை விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தரகரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
- யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்தது அம்பலம்.
போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதில், பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.
10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் ஆகும்.
மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது தெரியவந்துள்ளது.
யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- போலீசார் வாலிபர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணியளவில் ஏர் அரேபியா விமானம் வந்தது.
விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அதிகாரிகளுக்கு விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அந்த பாஸ்போர்ட் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா முகவரியில் இருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் போலியானது என்பது தெரியவந்தது.
இது குறித்து அதிகாரிகள் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த வாலிபர் தான் இந்தியன் எனவும், தனது சொந்த மாநிலம் மேற்குவங்கம் என கூறினார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபருக்கு பாட தெரியவில்லை.
தொடர்ந்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் வங்கதேச நாட்டை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 28) என்பது தெரியவந்தது. டெய்லரான இவர் முதலில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் போலி பாஸ்போர்ட் எடுத்து ஷார்ஜாவுக்கு வேலைக்கு சென்று உள்ளார். அங்கு போதிய சம்பளம் கிடைக்காததால் மீண்டும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்தது தெரிய வந்தது.
போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கோவைக்கு வந்த வங்கதேச வாலிபரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வெளிநாட்டினர் என்பதை மறைத்து போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த வாரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
- வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம்(37)என்ற பெண் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை சரி பார்த்த போது அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து ரீனா பேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து அவர் மேற்குவங்க மாநிலம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவியதும், இந்தியாவில் போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜென்டுகள் மூலம், பணம் கொடுத்து இந்த போலி பாஸ்போர்ட்டை வாங்கியதும் தெரியவந்தது.
அவர் இந்த போலி பாஸ்போர்ட் எதற்காக வாங்கினார்? இந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெங்கு சென்றார்? சென்னைக்கு எதற்கு வந்தார்? எங்கு தங்கி இருந்தார்? அதனை தயாரித்து கொடுத்தவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை செய்தனர்.
பின்னர் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரீனாபேகம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ரீனாபேகம் விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் இதை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் பிடிபடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.
இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது.
- பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர்.
திருப்பதி:
சீனாவை சேர்ந்தவர் டூயிங். இவர் வியாபார நிமித்தமாக சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்த அவரது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீண்டும் சீனாவிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை பாரிசை சேர்ந்த சல்மான் (வயது 32), கண்ணன் (34) ஆகியோர் டூயிங் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு நாடு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வருவதையும் அவர் தற்போது ரேணிகுண்டாவில் இருப்பதையும் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் ரேணிகுண்டாவிற்கு வந்து டூயிங்கை சந்தித்து தங்களுக்கு தெரிந்த பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று தருவதாக தெரிவித்தனர்.
இதை உண்மை என அறிந்த டூயிங் அவர்கள் கேட்ட ரூ.12 லட்சத்தை கொடுத்தார். இதையடுத்து சல்மான், கண்ணன் ஆகியோர் டூயிங்கிடம் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு சென்றனர். தனது சொந்த நாட்டிற்கு செல்வதற்காக டூயிங் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அங்கு அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த அதிகாரிகள் பாஸ்போர்ட் போலியானது என தெரிவித்தனர். இதையடுத்து டூயிங், சல்மான், மற்றும் கண்ணன் ஆகியோரது செல்போனை தொடர்பு கொண்டார்.
அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டியிடம் டூயிங் புகார் செய்தார்.
பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் பேரில் திருப்பதி டி.எஸ்.பி ராமச்சந்திரா தலைமையிலான போலீசார் சென்னை பாரிசில் பதுங்கி இருந்த சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கண்ணனை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்