search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று வந்த 2 பேர் கைது
    X

    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்று வந்த 2 பேர் கைது

    • இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
    • ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் குப்பன் வலசை பகுதியை சேர்ந்த பாலு (வயது 58) என்பவர் போலியான பாஸ்போர்ட் வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன் (49) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவர்கள் இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×