சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரெயில் மோதி வாலிபர் பலி

சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

சேலம்:

சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com