என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேல்புவனகிரியில் லாரி மோதி பிளஸ்-1 மாணவன் உடல் நசுங்கி பலி
- சந்தோஷ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
- பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் மேல்புவனகிரியை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்று காலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் மேல்புவனகிரி ராகவேந்திரா வீதியில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறு கீழே விழுந்த சந்தோஷ் மீது, டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பிளஸ்-1 மாணவன், உடல் நசுங்கி உயிரிழந்தான்.
இதனைக் கண்ட டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார், மாணவன் சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித ம்பரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுபபிவைத்தனர். லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






