search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilian"

    • அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர்.
    • விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன் பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). இவர் தனது மனைவி காயத்ரி, தாயார் நாகம்மாள் (60) மற்றும் 2 குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். வடிவேல் மற்றும் காயத்ரி இருவரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    நாகம்மாள் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வடிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். மாலை வேலைக்கு சென்ற தனது தாயாரை அழைத்து வருவதற்காக வீட்டை பூட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.பின்னர் தனது தாயாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவன் வீட்டுக்குள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து திருடன்... திருடன்... என வடிவேல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து வீட்டின் கதவை இழுத்து பூட்டினர். மேலும் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கதவை பூட்டியதால் உள்ளே சிக்கிய திருடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்தான். பொதுமக்களிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த சேலையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றான்.

    இதனிடையே அங்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் திருடனை மடக்கி பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போது திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச்சேர்ந்த முஸ்தபா மகன் இஸ்மாயில் (30) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கொள்ளையில் ஈடுபட முயன்ற வாலிபர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பிக்க தூக்கு ப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.
    • இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.

    எடப்பாடி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யில், நீண்ட நாள் கோரிக்கை யாக உள்ள மக்கள் பிரச்சனை குறித்து விவரம் வழங்குமாறு கோரி யிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து எடப்பாடி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விவரங்களை முதல்-அமைச்சருக்கு அளித்திருந்தார்.

    அவற்றில் ஒன்றாக, எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் சுற்றுலா பயணி கள் தங்கி செல்லும் வகை யிலான ஓய்வு விடுதி அமைத்து தர கோரி இருந்தார்.

    இதனை பரிசீலித்த தமிழக அரசு பூலாம்பட்டி பகுதியில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் ஓய்வு விடுதி, உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைப்ப தற்கான பணிகளை தொடங்கியது.

    முதற்கட்டமாக, இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணியினை தொடங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு விடுதி மற்றும் இதர கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அப்பகு தியில் புதிய கட்டுமானப் பணி தொடங்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி- மேட்டூர் பிரதான சாலை யில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து அப்பகு திக்கு வந்த உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது, தற்காலிகமாக அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறாது என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் பூலாம்பட்டி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
    • உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).

    இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.

    பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில்  திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

    இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு திரண்ட   கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×