search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public road blocking"

    மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில்  திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

    இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு திரண்ட   கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    திண்டுக்கல் அருகே புயல் நிவாரணம் வழங்க கோரி பொது மக்கள் சாலை மறியல் திண்டுக்கல் - 4

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே விருப்பாட்சி கிழக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்/ கஜா புயல் மழை பெய்ததில், அப்பகுதியில் இருந்து 9 புளிய மரங்கள் வேருடனும், கிளைகளும் ஒடிந்து, 14 கூரை ஆஸ்பெட்டாஸ், ஓட்டு வீடுகளில் விழுந்து மேற்கூரைகள் சேதமடைந்தது. இதில் உதயக்குமார், தெய்வானை ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஆனால் வருவாய்த்துறையினர் இதுவரை அந்த பகுதி மக்களை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அவர்கள் குடிநீர், உணவு இன்றி தவித்தனர்.

    ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பழனி- திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கோ‌ஷம் போட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தாசில்தார் லீலாரெஜினா, சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்அமுதா, மண்டல துணை தாசில்தார் சசி, விருப்பாட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. 

    ×