search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம், குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்த விபத்துகளில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி
    X

    விபத்தை ஏற்படுத்தியா கார் மற்றும் பலியானவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம். பலியான கந்தசாமி, சிவரஞ்சனி.

    ராசிபுரம், குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்த விபத்துகளில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி

    • மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவினர்கள் ஆகியோரும் சென்றனர்.
    • சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் சிமெண்ட் தொட்டி, சிமெண்ட் குழாய், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்று வந்தார்.

    குலதெய்வம் கோவில்

    இன்று காலையில், சரவணன் மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவி லுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவி னரான முத்து (39), இவரது மகன் சாய்பாலமித்திரன் (4) ஆகியோரும் சென்றனர்.

    சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது.

    2 பேர் பலி

    இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முத்து மற்றும் அவரது குழந்தை இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், சாய்பால மித்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணை

    உயிரிழந்த சரவணனின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், சாய் பாலமித்திரனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது, விபத்துக்குள்ளாகி குழந்தை உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுடைய மகள் சிவ நந்தினி (17), மகன் அனிருத் (15). இதில் சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தான் பொதுத்தேர்வு எழுதி முடித்து உள்ளார். அனிருத் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் அந்தி யூரில் உள்ள குலதெய்வ கோவிலான பத்ரகாளி யம்மன் கோவிலுக்கு கந்தசாமி, நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் நேற்று சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார்சைக்கி ளில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பவானியை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    தந்தை- மகள் சாவு

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நிர்மலாவும், சிவ நந்தினியும் கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே சிவ நந்தினி பரிதாபமாக இறந்தார்.

    நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த கந்தசாமி, சிவ நந்தினி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுஉள்ளன. கோவிலில் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றதால் கந்தசாமி களைப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது. அந்தியூரில் இருந்து திரும்பும் போது தனக்கு தூக்கம் வருவதாக மனைவியிடம் தெரி வித்துள்ளார். இதனால் வழி யில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி 3 பேரும் டீ குடித்துவிட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டனர்.

    எனினும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே தூங்கியதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசா ரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×