வன்புணர்வு செய்யமுடியாத விரக்தி.. சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்ற உறவினர்

தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.
வன்புணர்வு செய்யமுடியாத விரக்தி.. சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொன்ற உறவினர்
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.

தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com