அரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறை வார்டன் மீது வழக்கு

சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அரூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறை வார்டன் மீது வழக்கு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூரில் உள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி உள்பட 3 குழந்தைகளையும் பாட்டி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி சொந்த ஊருக்கு கணவன், மனைவியும் வந்தனர். அப்போது தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.

உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.

இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com