சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் போக்சோவில் கைது

சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய பூக்கடைக்காரர் போக்சோவில் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com