என் மலர்
புதுச்சேரி

கள்ளக்காதலியின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த 2 குழந்தைகளின் தந்தை கைது
- நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
- அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.